For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'NATO' நாடுகளை தாக்க திட்டமா.? ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விளக்கம்.!!

05:10 PM Mar 28, 2024 IST | Mohisha
 nato  நாடுகளை தாக்க திட்டமா   ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விளக்கம்
Advertisement

உக்கரை நாட்டின் எல்லை பகுதியை குறி வைத்து தாக்குதல் நடத்தும் போது போலந்து நாட்டின் வான் விடியில் ரஷ்ய படைகள் அத்துமீறி நுழைந்தன. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பான அவரது பேச்சு ரஷ்ய படைகள் நேற்று நாடுகளை குறி வைக்க திட்டமிடுகிறதா என்ற ஊகங்களைத் தூண்டியது.

Advertisement

போலந்து நாட்டின் எல்லையில் அத்துமீறியது தொடர்பாக பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போலந்து, பால்டிக் நாடுகள் அல்லது செக் குடியரசு உட்பட எந்த நேட்டோ நாட்டையும் தாக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என்று கூறினார். மேலும் மேற்கத்திய நாடுகள் கூறிவரும் போய்க் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். எனினும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்கினால் அவற்றை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தும் என விளாடிமிர் புடின் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ரஷ்ய விமானப்படை விமானிகளிடம் பேசிய புடின், 1991 சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணி கிழக்கு பக்கமாக ரஷ்யாவை நோக்கி விரிவடைந்துள்ளது. ஆனால் ரஷ்யாவிற்கு நேற்று நாடுகளை தாக்கும் எந்த ஒரு திட்டமும் இல்லை. நாங்கள் ஒரு சில நாடுகளை தாக்குவோம். ஆனால் போலந்து மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகளை தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

உக்கரைன் நாட்டிற்கு பணம் ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறை உதவிகளை வழங்கி ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது என கிரெம்ளின் குற்றம் சாட்டி இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் உக்கரைனுக்கு வழங்குவதாக உறுதியளித்த F-16 ரக போர் விமானங்கள் அந்த நாட்டின் நிலையை மாற்றாது எனவும் புடின் தெரிவித்தார். டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் பல ராக்கெட் லாஞ்சர்கள் உட்பட பிற உபகரணங்களை அழிப்பது போல் அந்த விமானங்களையும் சுட்டு வீழ்த்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

F16 ரக போர் விமானங்களின் மூலம் அணு ஆயுதங்களையும் எடுத்துச் செல்ல முடியும் என தெரிவித்த புடின் நிச்சயமாக F16 ரக போர் விமானங்கள் மூன்றாம் நாடுகளின் விமான நிலையங்களில் இருந்து எங்கள் மீது ஏவப்பட்டாலும் அவை எங்களுக்கு இலக்குகளாக மாறும் என எச்சரித்துள்ளார்.

Read More: Pension Hike | செம குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் ஓய்வூதியம் உயர்வு..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Advertisement