முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ராகுல் காந்தி நேருவின் பேரன் தானா..? திடீரென கிளம்பிய சந்தேகம்..!! டிஎன்ஏ பரிசோதனை பண்ணுங்க..!!

08:41 AM Apr 24, 2024 IST | Chella
Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் 2ஆம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் அரசை சுயேட்சை எம்எல்ஏ பி.வி. அன்வர் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

Advertisement

அப்போது, எம்எல்ஏ பி.வி. அன்வர் கூறுகையில், ”ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு பகுதியைச் சேர்ந்தவன் தான் நான். அவரை காந்தி என்ற பெயரைச் சொல்லி அழைக்க முடியாது. அவர் அந்த அளவுக்கு கீழ்த்தனமான குடிமகனாக மாறிவிட்டார். காந்தியின் பெயரை பயன்படுத்த ராகுல் காந்திக்கு தகுதியே இல்லை. நான் மட்டுமல்ல கடந்த சில நாட்களாக நாட்டு மக்களும் இதை தான் கூறி வருகின்றனர். நேரு குடும்பத்தில் இருந்து இப்படி ஒரு நபரா? நேருவின் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இப்படி பேசுவார்களா..? எனக்கு சந்தேகமாக உள்ளது.

ராகுல் காந்திக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஜவஹர்லால் நேருவின் பேரன் என்று சொல்லிக் கொள்ள ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் இல்லை. மோடியின் ஏஜென்டாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த விவகாரம் கேரள அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Read More : வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! கட்டணம் அதிரடியாக உயருகிறது..!! வெளியான திடீர் அறிவிப்பு..!!

Advertisement
Next Article