For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

PM MODI | "ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமானம்"… சமூக வலைதளத்தில் தொல்.திருமாவளவன் கண்டனம்.!!

04:41 PM Apr 01, 2024 IST | Mohisha
pm modi    ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமானம் … சமூக வலைதளத்தில் தொல் திருமாவளவன் கண்டனம்
Advertisement

PM MODI: இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவமதிக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல் திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்தியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா விருது வழங்கும் நிகழ்வு மார்ச் 30ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

Advertisement

இந்த வருடத்திற்கான பாரத ரத்னா விருத்திற்கு முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் சரண் சிங் பசுமை புரட்சி எம்எஸ்.சுவாமிநாதன் இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் எல்கே அத்வானி மற்றும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமூக நீதி காவலருமான கர்பூரி தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட குடும்பத்தினர் மறைந்த தலைவர்கள் சார்பாக விருதை பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான எல்கே அத்வானிக்கு அவரது வீட்டில் வைத்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு துணை குடியரசு தலைவர் பிரதமர் நரேந்திர மோடி(PM MODI) மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எல்கே அத்வானி அமர்ந்திருக்க ஜனாதிபதி திரௌபதி முர்மு நின்று கொண்டிருந்தார். இதற்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரான தொல் திருமாவளவன் தனது X வலைதள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள திருமாவளவன் " ஒரு நாட்டின் குடியரசு தலைவரை நிற்க வைத்து அவமரியாதை செய்ததை எங்கும் கண்டதில்லை என பதிவு செய்துள்ளார். மேலும் ஜனாதிபதி ஒரு பெண் என்பதால் இவ்வாறு அவமதிக்கப்பட்டாரா.? அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவமதிக்கப்பட்டாரா.? இல்லை பாரதிய ஜனதா கட்சியினர் அரசியல் சாசன சட்டத்தையே மதிக்க வில்லையா.? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Read More: முஸ்லிம் இளைஞரை வெறி கொண்டு தாக்கிய கொடூரன்கள்..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

Advertisement