ஒரே நாடு ஒரே தேர்தல் அமலா?. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 2024 எப்போது?. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!
Parliament: நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளையும் கூட்டக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதில், அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டதன் 75ம் ஆண்டு விழாவையொட்டி நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தின விழாவில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடைபெறும்’’ என்றார்.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த கூட்டுக்குழு தனது இறுதி அறிக்கையை வரும் 29ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Readmore: நம்பிக்கை இல்லை!. இஸ்ரேல் ராணுவ அமைச்சர் டிஸ்மிஸ்!. பிரதமர் நெதன்யாகு அதிரடி!