இந்த குளிர்காலத்தில் எண்ணெய் குளியல் சாத்தியமா.? மருத்துவர்களின் அட்வைஸ்.!
குளியல் என்பது என்றுமே ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். அதிலும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலின் உஷ்ணம் குறைவதோடு உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளும் கிடைக்கிறது. மேலும் இதனால் சருமம் பொலி உடையவதோடு முடி உதிர்தல் போன்றவையும் தடுக்கப்படுகிறது.
நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்பதால் குளிர்காலத்திலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா என் ஒரு சந்தேகம் இருக்கும். இது தொடர்பாக மருத்துவர்கள் குளிர்காலத்திலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் என கூறுகின்றனர். ஆனால் குளிர் காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துகின்றனர். வெயில் காலத்தை போல் அதிகாலையிலேயே குளிக்காமல் சூரியன் நன்றாக உதிக்க ஆரம்பித்ததும் என்னை தேய்த்து குளிப்பது சிறந்தது என அறிவுறுத்துகின்றனர்.
குளிர்காலத்தில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் சரும வறட்சி மற்றும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் ஆகியவை நீங்கும். மேலும் பொடுகு தொல்லையும் இருக்காது. குளிர்காலத்தில் ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனை இருப்பவர்களும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஆனால் அவர்கள் குளிப்பதற்கு முன்பு சுக்கு, வசம்பு, ஏலக்காய் மற்றும் இலவங்க பட்டை ஆகியவற்றை எண்ணெயில் போட்டு நன்றாக வறுத்து பின்னர் அந்த என்னையே வடிகட்டி பயன்படுத்த வேண்டும். இதனால் சுவாச பாதிப்புகள் ஏற்படாது.