மணி ப்ளாண்ட் வைத்தும் பண கஷ்டமா? அப்போ இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!!
மணி ப்ளாண்ட் செடிகளை வீட்டில் வைத்தால், பணம் செழிக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், மணி ப்ளாண்ட்டை முறைப்படி வைத்தால் மட்டுமே அதன் பலன்களை பெற முடியும்.
ஜோதி முறைப்படி வீட்டில் மணி பிளாண்ட் வளர்த்தால் அந்த செடி படர்வதை போல நம் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி பணம் என்பது ஐதீகம். ஆனால், மணி பிளாண்ட் வைத்தால் மட்டும் பல கஷ்டம் நீங்கிவிடுமா? என்று கேட்டால் இல்லை. வீட்டில் மணி ப்ளாண்டை வாஸ்துபடி வைத்தால் மட்டுமே அதன் பலனை பெற முடியும். மணி ப்ளாண்ட்டை எந்த திசையில் எப்படி வைக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மணி ப்ளாண்ட்டை வைக்கும் முறை:
1) வாஸ்துபடி வீட்டின் தென்-கிழக்கு திசையில் மணி ப்ளாண்ட்டை வைத்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி - செல்வ வரவு பெருகும்.
2) வாஸ்துப்படி வீட்டில் வைக்கும் மணி ப்ளாண்ட் தரையை தொடும் படி (அ) படரும் படி நீளமாக வளர்க்கக் கூடாது . முடிந்த வரை தரையை தொடாதவாறு மணி ப்ளாண்ட்டை வைக்க வேண்டும்.
3) மணி ப்ளாண்ட்டை சூரிய ஒளி அதிகம் படும் இடத்தில் வைக்கக் கூடாது. காரணம் இந்த சூரிய ஒளி செடியை வாடச் செய்வதோடு - வீட்டில் இருக்கும் நபர்களின் மன கஷ்டங்களுக்கும் வழிவகுக்கும்.
4)மணி ப்ளாண்டினை வீட்டிற்கு வெளியே திறந்தவெளியிலும் வைக்கக் கூடாது. இவ்வாறு இந்த செடியை வீட்டிற்கு வெளியே வைப்பது பண கஷ்டத்திற்கு வழிவகுக்கும்.
5) வீட்டின் நுழைவாயில் வடக்கு திசையில் இருப்பின், இந்த வாசலுக்கு அருகில் ஒரு மணி ப்ளாண்ட் வைப்பது வீட்டிற்குள் நல்ல ஆற்றல்கள் கொண்டுவர உதவும் . குடும்பங்களில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.
6)மணி ப்ளாண்ட் இலைகளை பழுத்து சிவப்பாக மாறும் அளவிற்கு பராமரிக்காமல் விடுவது - வீட்டில் உள்ள நபர்களின் உடல்நல குறைவை குறிக்கிறது. எனவே, அவ்வப்போது இந்த பழுத்த இலைகளை நீக்கிவிட வேண்டும்.
7) படுக்கையறையில் மணி ப்ளாண்ட் வைப்பது, கணவன் - மனைவி இடையே வரும் பிரச்னைகளை தவிர்க்க உதவும். மேலும், இருவருக்கும் இடையேயான நெருக்கத்தையும் அதிகரிக்கும்.
8) மணி ப்ளாண்ட்களை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக நீங்கள் அளிப்பது உங்கள் அதிர்ஷ்டங்களை தாரைவார்த்து தருவதற்கு சமம் ஆகும். எனவே, எக்காரணம் கொண்டும் மணி ப்ளாண்ட்களை மற்றவர்களுக்கு பரிசளிக்க கூடாது.
Read More: ’இப்படியே போன இனி வீடு வாங்க முடியாது போலயே’..!! விலை தாறுமாறாக உயர்வு..!!