For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மொபைல் இன்டர்நெட் ஸ்லோவா இருக்கா? ஹை ஸ்பீடு டேட்டாவுக்கு இதை ட்ரை பண்ணுங்க!

If your smartphone's internet speed is slow, here is a simple method to increase the speed.
08:28 AM Jun 16, 2024 IST | Mari Thangam
மொபைல் இன்டர்நெட் ஸ்லோவா இருக்கா  ஹை ஸ்பீடு டேட்டாவுக்கு இதை ட்ரை பண்ணுங்க
Advertisement

உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால், வேகத்தை அதிகரிக்கப்பதற்கான எளிய முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் அன்றைய பொழுதை கடப்பது மிகவும் கஷ்டமான ஒன்றுதான். இப்படியான சூழ்நிலையில், இன்டர்நெட் மெதுவாக அல்லது விட்டுவிட்டு இயங்கினால், அது நம்மை எரிச்சலடைய செய்யும். ஒரு சில நேரங்களில் உங்களுக்கும் இப்படியான சூழல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. இதனை தவிர்க்க நீங்கள் ஸ்மார்ட் ட்ரிக்ஸ் ஒன்றை பயன்படுத்தினால் போதும். இன்டர்நெட்டின் வேகம் அதிகரிக்கும்.

உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால், வேகத்தை அதிகரிக்கப்பதற்கான எளிய முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். மொபைலின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உங்கள் மொபைலின் ஏர்பிளேன் மோடை ஆன் செய்யலாம். சில நிமிடங்களுக்குப் பிறகு, நீங்கள் அந்த ஆப்சனை ஆஃப் செய்தால் இணைய வேகத்தில் பெரிய வித்தியாசத்தை உங்களால் காண முடியும்.

செட்டிங்ஸில் சில மாற்றம்..!!

இணைய வேகத்தை அதிகரிக்க மற்றொரு வழி, உங்கள் மொபைலின் மொபைல் டேட்டா உங்கள் சிம்மைச் சார்ந்த சில நெட்வொர்க் ஆப்சன்களை வழங்குகிறது. 5ஜி நெட்வொர்க் இருந்தாலும், அதில் சிக்னல் சரியில்லை என்பது பல நேரங்களில் நடக்கும். இந்த சமயத்தில், தொலைபேசியின் செட்டிங்கிற்கு சென்று, ‘மொபைல் டேட்டா’ விருப்பத்தை கிளிக் செய்து, பின்னர் ‘2G/3G/4G/5G ஆட்டோ’ விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் டேட்டா ஸ்பீடு சூப்பராக வரும் நெட்வொர்க்கை தானாகவே பெறுவீர்கள். மேலும், சிம் கார்டு மூலம் டேட்டா ஸ்பீடை நீங்கள் அதிகரிக்கலாம். சிம் கார்டில் தூசி படிந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என்பதால், அதனை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும். இதன் வழியாகவும் டேட்டா ஸ்பீடு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

Read more ; திக்!. திக்!. சிறுவர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு!. 10 பேர் படுகாயம்!. பீதியில் மக்கள்!

Tags :
Advertisement