For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சுயநினைவோடு இருக்கிறாரா கமல்?… மூளையை பரிசோதிக்க வேண்டும்!… அண்ணாமலை விமர்சனம்!

06:48 AM Apr 09, 2024 IST | Kokila
சுயநினைவோடு இருக்கிறாரா கமல் … மூளையை பரிசோதிக்க வேண்டும் … அண்ணாமலை விமர்சனம்
Advertisement

Annamalai: இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும் என்று கூறிய கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் அனுமதித்து அவரது மூளையை பரிசோதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Advertisement

திமுக கூட்டணியில் இணைந்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக வடசென்னையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்தியாவின் தலைநகர், ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நாக்பூருக்கு மாற்றப்படும் என்று அச்சம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கமல்ஹாசனை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும்.

இந்தியாவின் தலைநகரை எப்படி நாக்பூருக்கு மாற்ற முடியும்? இப்படி கூறிய கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் அனுமதித்து அவரது மூளையை பரிசோதிக்க வேண்டும். அவர் உண்மையில் நன்றாகத்தான் இருக்கிறாரா? அவரது இடது, வலது மூளை சரியாக செயல்படுகிறதா? சுயநினைவோடுதான் இருக்கிறாரா? சரியாக சாப்பிடுகிறாரா? என பரிசோதிக்க வேண்டும். அவர் மட்டுமல்ல இப்படி கூறுபவர்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். அவர் உண்மையாகவே ஆரோக்கியமான கருத்துக்களைதான் பேசுகிறாரா? அல்லது ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியை திமுகவிடம் அடகு வைத்துவிட்டு இப்படி கூவுகிறாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் மணிப்பூருக்கு போகாமல் தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறாரே என முதலமைச்சர் விமர்சித்துள்ளாரே? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “ஏன் திமுக கதறுகிறார்கள். தன்னுடைய நாட்டில் உள்ள தமிழகத்திற்கு பிரதமர் வருகிறார். இதனால் திமுகவுக்கு ஏன் பயம்? இதே முதலமைச்சர் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு காரில் வந்து, மாவட்ட தலைநகரில் தங்கி பேசுகிறாரே, ஏன் முதலமைச்சர் கிராமங்களுக்கு செல்லவில்லை? இதுவரை எத்தனை கிராமங்களுக்கு அவர் சென்றிருக்கிறார்? முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எத்தனை கிராமங்களில் அவர் இரவு தங்கியிருக்கிறார்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Readmore: NEET: நீட்டிக்கப்பட்ட ஒருநாள் கால அவகாசம்!… மிஸ் பண்ணிடாதீங்க!

Advertisement