For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மனைவி ஆர்த்தியை விவகாரத்து செய்கிறாரா ஜெயம் ரவி..? இன்ஸ்டாவில் புகைப்படங்களை நீக்கியதால் வெடித்த சர்ச்சை..!! உண்மை என்ன..?

Jayam Ravi is one of the leading actors of Tamil cinema. There were reports that he was going to divorce his wife Aarti.
03:09 PM Jun 25, 2024 IST | Chella
மனைவி ஆர்த்தியை விவகாரத்து செய்கிறாரா ஜெயம் ரவி    இன்ஸ்டாவில் புகைப்படங்களை நீக்கியதால் வெடித்த சர்ச்சை     உண்மை என்ன
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்தன. இது தொடர்பாக கணவன்-மனைவி இரு தரப்பிலும் எவ்விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், ரசிகர்களிடம் குழப்பம் நீடித்தது. தற்போது ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் ஜெயம் ரவியுடனான புகைப்படங்களை நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சமீபத்தில் ஜெயம் ரவி திரையுலகிற்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் ஆர்த்தி பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இருவரும் சேர்ந்து தான் இருப்பார்கள் என்று ஆறுதல் அடைந்தனர். ஆனால், தற்போது இந்த தகவல் மேலும் குழப்பத்தையே அதிகரித்துள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி தங்கள் விவாகரத்து பெற்றுக் கொள்ளப் போவதை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More : ’பயணிகளே’..!! ’ரயிலில் இனி நிம்மதியா தூங்கலாம்’..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..!!

Tags :
Advertisement