முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா..? அண்ணாமலையை விளாசிய அதிமுக ஜெயக்குமார்..!!

On behalf of the AIADMK, AIADMK organizational secretary Jayakumar strongly condemned Annamalai for referring to Jayalalithaa as a 'Hindutva leader'.
02:24 PM May 25, 2024 IST | Chella
Advertisement

ஜெயலலிதாவை 'இந்துத்துவா தலைவர்' என குறிப்பிட்ட அண்ணாமலைக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்த ஜெயலலிதாவை ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்புகிறார் அண்ணாமலை. அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஜெயலலிதா. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் ஜெயலலிதா.

அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மாண்புமிகு அம்மா அவர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஒற்றை மதவாதத்தைச் சார்ந்த தலைவர் போல பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவர் வழியில், "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையில் பொற்கால ஆட்சி தந்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா.

அண்ணாமலை அவர்கள், தனது சொந்த அரசியல் லாபத்திற்காகவும், தமிழ்நாட்டில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் ஜெயலலிதா அவர்கள் இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ’கற்களை சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லது’..!! பயனருக்கு AI கொடுத்த வினோத பதில்..!!

Tags :
actress jayalalithaactress jayalalitha exclusive interviewactress jayalalitha interviewactress jayalalitha latest interviewjayalalithajayalalitha deathjayalalitha funeraljayalalitha interviewjayalalitha moviejayalalitha old songsjayalalitha songsjayalalitha speechJayalalithaasarath babu jayalalithasenior actor jayalalitha interviewsenior actress jayalalithasenior actress jayalalitha moviestelugu actress jayalalitha
Advertisement
Next Article