வாழைப்பழம் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்பது உண்மையா..? மருத்துவர்கள் ஏன் இப்படி சொல்றாங்க..?
நம்முடைய உடல் ஆரோக்கியத்தை எப்போதும் நல்ல விதத்தில், வைத்திருப்பதற்கு மருத்துவர்கள் சொல்லும் முதன்மை ஆலோசனை பழங்களை அன்றாடம் சாப்பிடுங்கள் என்பதாகும். அப்படிப்பட்ட பழங்களில் முதன்மையான இடத்தில் இருப்பது வாழைப்பழம் ஆகும். அந்த வாழைப்பழம் தொடர்பான நன்மைகள் பற்றியும், பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. அந்த குழப்பங்களில் முக்கியமான ஒன்று, வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்பதாகும். இது தொடர்பாக முழுமையான உண்மை தன்மை குறித்து நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய உடல் ஆரோக்கியத்தை நல்ல விதத்தில், வைத்திருப்பதற்காக எதை உண்ணலாம், எதை உண்ணக்கூடாது என்பது எப்போதும் ஒருவித விவாத பொருளாகவே இருந்து வருகின்றது. காய்கறி, இறைச்சி உள்ளிட்டவை போல, பழங்களும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும் என்று சொல்லப்படுகிறது.
நாம் சாப்பிடும் பல்வேறு பழங்கள், பல்வேறு நன்மைகள் மற்றும் பல்வேறு தீமைகளை தன்னகத்தே கொண்டு இருக்கின்றன. அத்துடன், பலவிதமான அறிவுறுத்தல்கள், கட்டுக் கதைகள் மற்றும் உண்மைகளும் அதன் மூலமாக கண்டுபிடிக்கப்படுகின்றன. வாழைப்பழம் தொடர்பாகவும், அதன் நன்மைகள் தொடர்பாகவும் பல்வேறு குழப்பங்கள் சமூகத்தில் காணப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முக்கியமான குழப்பம் தான் வாழைப்பழம் சாப்பிட்டால், உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்று சொல்லப்படுவதாகும்.
ஆனாலும், நாம் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், பழங்கள் எப்போதும் மருத்துவர்களால், நமக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு சிறந்த உணவாக உள்ளது. சில நேரங்களில் வாழைப்பழங்களில், அதிக கலோரிகள் இருக்கலாம். மேலும், அது கொழுப்பை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். ஆனால், இன்று வரையில் வாழைப்பழம் உடலை எடை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் செயலை எப்படி சரியாக பாதிக்கிறது என்பது தொடர்பாக உறுதி செய்ய எந்த விதமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அதாவது, அந்த வாழைப்பழத்தில் நார்சத்து அதிகம் இருக்கிறது. அதோடு, குறைந்த கலோரிகள் இருக்கின்றன. அத்துடன், அவை உடல் எடை இழப்பு டயட்டில் சேர்க்க ஒரு நல்ல பழமாக இருக்கிறது. வழக்கமான உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு நார் சத்து முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அத்துடன் செரிமான ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நார்ச்சத்து உணவுகள் அதோடு, வயிற்றை வெகு நேரம் திருப்திகரமாக வைத்திருப்பதற்கும், பசியின்மையை குறைப்பதற்கும், மேலும், நோய்களை ஏற்படுத்தும் அபாயத்தை குறைப்பதற்கும் இது உதவியாக உள்ளது.
ஊட்டச்சத்தின் அடிப்படையில் வாழைப்பழங்கள் இயற்கையான முறையில் அதிகமாக ஊட்டச்சத்தை கொடுக்கும் பழங்களில் ஒன்றாக இருக்கிறது என்பது ஊட்டச்சத்து வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. வாழைப்பழங்களில், பொட்டாசியம், விட்டமின் ஏ, பி.6 மற்றும் சி உள்ளிட்டவற்றின் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இந்த பழத்தில் லேசான மலமிளக்கி குணம் இருக்கிறது. அத்துடன், இது வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றை குணப்படுத்த உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குடல் புண்களை குணப்படுத்தவும் இது உதவியாக உள்ளது.
வாழைப்பழங்களில் அவற்றின் ஆண்டாக்சிட் விளைவுகளுக்காக வெகு காலமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இது வயிற்றுப் புண்கள் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. வாழைப்பழங்கள் அமிலத்தன்மையை நடுநிலையாக வைத்திருக்க உதவி புரிகின்றன. அவை நெஞ்சு எரிச்சல் உள்ளிட்டவற்றில் இருந்து விடுபட ஒரு சிறந்த வழி என சொல்லப்படுகிறது.