முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்றா..? நாளையா..? 3ஆம் உலகப்போர் உறுதி..!! பிரபல நாஸ்டர்டாமஸ் அதிர்ச்சி கணிப்பு..!!

There is a fear that a world war will develop due to the ongoing conflict between Israel and Iran.
03:35 PM Aug 04, 2024 IST | Chella
Advertisement

இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக உலகப் போர் உருவாகி விடுமோ என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே பல மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி தரப்படும் என ஈரானும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று அல்லது நாளை உலக நாடுகள் மத்தியில் உலகப் போர் தொடங்கும் என இந்தியாவின் நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படும் குஷல் குமார் கணித்திருக்கிறார். 15ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் பிறந்த நாஸ்டர்டாமஸ் என்ற அறிஞர் எதிர்காலத்தை கணித்து கூறுவதில் வல்லவராக பார்க்கப்படுகிறார். அந்தவகையில், இந்தியாவின் நாஸ்டர்டாமஸ் என்று அறியப்படுபவர் ஹரியானாவைச் சேர்ந்த குஷல் குமார்.

தன்னை ஜோதிடர் எனக் கூறும் இவர், எதிர்கால நிகழ்வுகளை கணித்து எழுதி வருகிறார். இந்தாண்டு ஜூன் 18ஆம் தேதி அன்று உலக நாடுகள் மத்தியில் போர் வெடிக்கும் எனத் தெரிவித்தார். பின்னர், ஜூலை 26, 28 ஆகிய நாட்களில் போர் வரும் எனத் தெரிவித்த அவர், தற்போது இன்று அல்லது நாளை போர் வெடிக்கும் எனக் கூறி பரபரபப்பை கிளப்பியுள்ளார். ரஷ்யா, சீனாவின் ராணுவ விமானங்கள் அமெரிக்கா மற்றும் க்யூபா நாடுகளில் போர் ஒத்திகை செய்யும், இதனால் போர் வெடிக்கும். இந்த போரில் ஐரோப்பா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பல நாடுகள் ஈடுபடும் என அவர் கணித்துள்ளார்.

இவரது கணிப்பு எந்த அளவுக்கு உண்ணையாகும் என்பது ஒருபுறம் இருந்தாலும், இஸ்ரேலை மையமாக மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது என்பது உண்மை. நாஸ்டர்டாமஸ் உலகின் பல நிகழ்வுகளை சரியாக கணித்தவர். 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த இவர், அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் நடந்த பிரஞ்சு புரட்சி, நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரின் எழுச்சி, முதலாம், இரண்டாம் உலகப்போர், ஹிரோசிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பு, இரட்டை கோபுர தாக்குதல் ஆகிய பல்வேறு நிகழ்வுகளை தனது புத்தகத்தில் சரியாக கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : தீபாவளி பண்டிகை..!! நீங்களும் பட்டாசு கடை வைக்கணுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
world warமூன்றாம் உலகப்போர்
Advertisement
Next Article