For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாடையில் படுக்க வைத்து இப்படி ஒரு நேர்த்திக்கடனா..? சேலத்தில் நடந்த விநோதம்..!!

04:42 PM Apr 06, 2024 IST | Chella
பாடையில் படுக்க வைத்து இப்படி ஒரு நேர்த்திக்கடனா    சேலத்தில் நடந்த விநோதம்
Advertisement

சேலம் அருகே உள்ள கோயில் திருவிழாவில் ஒருவரை பாடையில் பிணமாக படுக்க வைத்து நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

Advertisement

கோயில்களில் வேண்டுதலுக்காக நேர்த்திக்கடனை பக்தர்கள் செய்வது வழக்கம். பல வித்தியாசமான நேர்த்திகடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டியில் பழமை வாய்ந்த மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் வினோத வழிபாடாக பக்தர் ஒருவர் பாடையில் பிணமாக படுக்கவைத்து நூதனமுறையில் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக கொண்டலாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பந்தல் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கு பிணம் போன்று படுத்து இருந்த பக்தருக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் செய்தனர். மேலும் உறவினர்கள், குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை போல கட்டிப்பிடித்து அழுதும், கண்ணீரும் வடித்தனர். பின்னர் பாடையில் பக்தரை தூக்கி வைத்து, இறுதி ஊர்வலமாக தெருத்தெருவாக கொண்டு சென்றனர்.

கொண்டலாம்பட்டியில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் சென்று. அங்கு ஒரு கோழியை மட்டும் புதைத்து விட்டு பின்னர் அனைவரும் கோயிலுக்கு வந்தனர். அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்திய பக்தர் உள்பட இறுதி ஊர்வலம் போன்று சென்ற அனைவரும், அம்மனை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றியதாக பூஜை செய்து வழிபட்டனர். பாடையில் ஒருவரை படுக்க வைத்து இறுதி சடங்கு வரை செய்த நேர்த்திக்கடன் விநோதமாக இருந்தது.

Read More : மக்களே..!! இன்றும், நாளையும் சம்பவம் இருக்கு..!! பாதுகாப்பா இருங்க..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Advertisement