அட இனி இவ்வளவு ஈசியா..? வாகன ஓட்டிகளே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
ஜூன் 1ஆம் தேதி முதல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் சில மாற்றங்களை, மத்திய அரசின் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிவித்து, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முறையையும் எளிதாக்கியுள்ளது. அந்தவகையில, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனிமேல் போக்குவரத்து அலுவலத்தில் தேர்வு எழுத வேண்டியதில்லை. ஓட்டுனர் உரிமம் பெற போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் திறன் தேர்வு எழுத வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கு பதிலாக, தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இனி ஓட்டுநர் திறன் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்காக, தனியார் ஓட்டுனர் பயிற்சி மையங்களுக்கு பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க குறைந்தது 1 ஏக்கர் நிலம் தேவை. கனரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க 2 ஏக்கர் நிலம் தேவை. இந்த மையங்களில் தகுந்த தேர்வு நடத்துவதற்கான விதிகள் இருக்க வேண்டும். பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்கள் குறைந்தது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 5 வருடங்கள் ஓட்டுனர் அனுபவம் உள்ளவர்களாகவும் இருப்பது அவசியம்.
'பயோமெட்ரிக்' மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படைகளை தெரிந்து வைத்திருப்பதும் அவசியம். இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி, குறைந்தது 4 வாரங்களும் அல்லது 29 மணி நேரம் இருக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கான பயிற்சி 6 வாரங்கள் அல்லது 38 மணி நேரமாக இருக்க வேண்டும். தனியார் பயிற்சி மையங்கள் அரசு அதிகாரிகளால் அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படும். மத்திய அரசின் இந்த அறிவிப்பானது, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காரணம், ஆர்டிஓ அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, LLR பதிவு செய்ய வேண்டும். பிறகு வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை ஓட்டிக்காட்ட வேண்டும். பிறகு, போட்டோ எடுத்துக் கொண்டு பிறகு நேரில் சென்று ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்..
இந்த நடைமுறையைதான், தற்போது எளிமையாக்கியுள்ளது மத்திய அரசு. இந்த புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள் மாற்றப்படுகின்றன. ஓட்டுநர் உரிமம் பெற விரும்புபவர்கள், தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்கலாம். உரிம தகுதிக்கான சோதனைகளை நடத்தி சான்றிதழ் வழங்கவும் தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 முதல் 2,000 அபராதமும், வாகனம் ஓட்டும் மைனர் பிடிபட்டால் அவர்களுக்கு ரூ.25,000 அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ’இப்படியே போன இனி வீடு வாங்க முடியாது போலயே’..!! விலை தாறுமாறாக உயர்வு..!!