காலையில் காஃபி குடித்துவிட்டு பல் துலக்கலாமா..? உங்களுக்கு இந்த பழக்கம் இருக்கா..? எச்சரிக்கை..!!
நல்ல வாய் சுகாதாரத்தை பராமரிப்பதில் பல் துலக்குவது இன்றியமையாத பகுதியாகும். ஆனால், காபி குடித்த பின்னர் உடனடியாக பல் துலக்குவது சரியானது அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா? காபி குடித்த பிறகு பல் துலக்க 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என துவாரகாவில் உள்ள Align Dental Clinic இன் மூத்த ஆலோசகர் ஆர்த்தடான்டிஸ்ட், டாக்டர் பிரேர்னா பஹுஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “காபி என்பது பலருக்கு விருப்பமான தினசரி பானம். ஆனால், இது பல் ஆரோக்கியத்திற்கு சில குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. பற்களில் கறைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி பல் சிதைவுக்கு வழிவகுக்கும், குறிப்பாக சர்க்கரையுடன் உட்கொள்ளும்போது பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பற்சிப்பி மென்மையாக இருப்பதால் காபி குடித்த உடனேயே பல் துலக்குவது சிராய்ப்பை ஏற்படுத்தும். இது பற்சிப்பி அரிப்பு, கூச்சம் மற்றும் சொத்தை பற்களுக்கு வழிவகுக்கும். கூடுதலாக சர்க்கரை ஈறுகளில் புண் அல்லது இரத்தப்போக்கு மற்றும் பீரியண்டால்ட் நோய்க்கு பங்களிக்கும். பீரியண்டால்ட் நோய் வந்தால் பற்கள் தளர்வாகிவிடும்.
பற்சிப்பி சேதத்தை குறைக்க, உங்கள் பல் துலக்குவதற்கு முன் காபி குடித்த பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருப்பது நல்லது. இந்த காத்திருப்பு காலம் உங்கள் உமிழ்நீரை அமிலத்தை நடுநிலையாக்க அனுமதிக்கிறது. இந்த நேரத்தில், உங்கள் வாயை தண்ணீரில் கழுவுவது கறைகள் சேராமல் அகற்றவும், அமிலத்தன்மையைக் குறைக்கவும் உதவும். காபி கறைகளை அகற்ற நினைத்தால் சரியான பற்பசையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் பற்களை திறம்பட சுத்தம் செய்யும் போது பற்சிப்பியைப் பாதுகாக்க குறைந்த RDA மதிப்பு (30-80 வரை) கொண்ட டூத் பேஸ்டை தேர்வு செய்ய வேண்டும்.
மேலும், பேக்கிங் சோடா போன்ற பொருட்கள் மேற்பரப்பு கறைகளை மெதுவாக அகற்றும். பற்சிப்பியை வலுப்படுத்தவும், சிதைவைத் தடுக்கவும், உங்கள் பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு ஃவுளூரைடு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் பஹுஜாவின் கூற்றுப்படி, காபி குடித்தாலும், பற்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்ய, இந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றலாம்:
* தண்ணீர் குடிப்பது உங்களை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. மேலும், காபி சாப்பிட்ட பிறகு உருவாகும் கறைகளை அகற்ற உதவும். காபி குடித்த பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கழுவுவது எச்சங்களை கழுவவும் அமிலங்களை நடுநிலையாக்கவும் உதவும்.
* ஆப்பிள், கேரட், செலரி போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரித்து, இயற்கையாகவே உங்கள் பற்களை சுத்தம் செய்கிறது.
* சர்க்கரை இல்லாத பற்பசையை பயன்படுத்த வேண்டும். இது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டி, உங்கள் வாயை சுத்தப்படுத்துகிறது. மேலும், உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது.
* ஆன்டிசெப்டிக் அல்லது ஃவுளூரைடு மவுத்வாஷைப் பயன்படுத்துவது பாக்டீரியாவைக் குறைக்கும் மற்றும் பற்சிப்பியை வலுப்படுத்தும்.
Read More : படுத்துக் கொண்டே இந்த விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க..!! ஏகப்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் வருமாம்..!!