For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமில்லையா..? சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

The Supreme Court has overturned a verdict that made it not a crime to privately watch pornographic films starring children.
11:56 AM Sep 23, 2024 IST | Chella
குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமில்லையா    சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
Advertisement

குழந்தைகள் நடித்த ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Advertisement

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குழந்தைகளின் ஆபாச படத்தை பார்த்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்றும், மற்றவர்களுக்கு அனுப்பினால் மட்டுமே குற்றம் எனத் தெரிவித்து காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், குழந்தைகள் நடித்த ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், குழந்தைகள் ஆபாச படம் என்பதற்கு பதிலாக குழந்தைகள் பாலியல் மற்றும் மோசடிகள், சுரண்டல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் ஆபாச படம் என்ற சொல்லாடலை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் போக்சோ சட்டத்தின் படி குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே அது குற்றம்தான் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Read More : ஒரு நைட்டுக்கு ரூ.10,000..!! வாட்ஸ் அப்பில் வந்த இன்ஸ்டா அழகிகள்..!! ஸ்பாட்டுக்கு போன மேனேஜருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Tags :
Advertisement