தினமும் ஆம்லெட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? நிபுணர்கள் சொன்ன பதில் இதுதான்..!
முட்டையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் அவை புரதத்தின் நல்ல மூலமாகும். முட்டையை பல்வேறு வழிகளில் சமைத்து சாப்பிடலாம். ஆனால் மிகவும் பிரபலமான முறை என்றால் அது ஆம்லெட் தான்.
பல்வேறு வழிகளில் தயாரிக்கப்படலாம். மிகவும் பிரபலமான முட்டை உணவுகளில் ஒன்று ஆம்லெட் ஆகும். பலருக்கும் விருப்பமான உணவாக இருக்கும் இந்த ஆம்லெட் பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன.
தினமும் தங்கள் உணவில் ஆம்லெட் சேர்த்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் தினமும் ஆம்லெட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
ஆம்லெட்டில் காய்கறிகள் மற்றும் சீஸ் இருந்தால் ஆகியவை சேர்த்து சமைக்கப்படும் போது அது சமச்சீரான உணவாக கருதப்படுகிறது. எனவே இப்படி சமைக்கப்படும் ஆம்லெட்டை எந்த கவலையும் இல்லாமல் தினமும் சாப்பிடலாம்.
முட்டை, வைட்டமின்கள், ஹார்மோன்கள் மற்றும் கொழுப்பை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ஒருவரின் பிஎம்ஐ, உயரம் மற்றும் உடல் எடை ஆகியவற்றின் அடிப்படையில் கொலஸ்ட்ரால் அளவு தீர்மானிக்கப்படுகிறது. உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை வைத்தே ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் அல்லது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை மிதமாக உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
முட்டையில் கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், ஒருவர் எத்தனை முட்டைகளை சாப்பிடலாம் என்பதில் அடிக்கடி குழப்பம் உள்ளது. குறிப்பாக முட்டை பிரியர்களுக்கு இந்தக் கேள்வி எழலாம். அதாவது முட்டை கெட்ட கொலஸ்ட்ரால் உற்பத்தியை அதிகரிக்கும். அதனால் தான் நீங்கள் எத்தனை முட்டைகள் சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, முட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இதை நிரூபிக்கும் வகையில் பல ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அதன்படி முட்டை இதயத்தை பாதிக்காது என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முட்டை உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது புரதச்சத்து நிறைந்த உணவு என்பதால் குறைந்த இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு முட்டை சிறந்த உணவாகும். முட்டையில் அமினோ அமிலங்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற உணவாக அமைகிறது.
தினமும் முட்டை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு கொழுப்புடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளலாம். எனவே கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் உங்கள் உணவு முறையில் மாற்றங்களை செய்யும் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
Read More : செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லது தான்.. ஆனா கவனமா இல்லன்னா அது நச்சு நீராக மாறலாம்..!