கனவில் உணவு பொருட்கள் வந்தால் நல்லதா? காரணம் தெரிஞ்சிக்கோங்க!!
நாம் காணக்கூடிய கனவில் வரக்கூடிய பொருட்களின் அடிப்படையில் அந்த கனவால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
நாம் காணக்கூடிய கனவுகள் பல விதங்களில் வரும். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அப்படி, கனவில் உணவுப் பொருட்கள் வந்தால். அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன.
1) கனவில் நெல்லிக்காய் சாப்பிடுவது போன்று வந்தால், உங்கள் செல்வம் ஈட்டுவது தொடர்பான ஆசை நிறைவேறப் போகிறது என்று அர்த்தம். அதாவது, நீங்கள் பணம் சம்பாதிக்க வாய்ப்பு அதிகரிக்கும். இந்த கனவின் காரணமாக உங்கள் நிறைவேறாத சில ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
2)மாம்பழம் சாப்பிடுவது போன்று கனவு வந்தால் உங்களுக்கு அபரிமிதமான செல்வத்தைப் பெறப்போகிறீர்கள் என்று அர்த்தம். அத்தகைய கனவுகள் உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்க செய்யும்.
3)புளி சாப்பிடுவதுபோல் கனவு வந்தால் அது நல்ல அறிகுறி. இருப்பினும், இதுபோன்ற கனவுகள் பெண்களுக்கு மட்டும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, அதே நேரத்தில் ஆண்களுக்கு மோசமானதாகக் கருதப்படுகிறது. கனவு வேதத்தின் படி, ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற கனவுகள் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதாக அமையும்.
4) கனவில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதைக் கண்டால், அன்னாசிப்பழத்தைப் போலவே வெளியே முள் போன்று இருப்பது போல முதலில் நீங்கள் கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும், அதன் பிறகு அதனுள் இருக்கும் இனிப்பான பழத்தைப் போல நீங்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவீர்கள் என்று அர்த்தம்.
5)இஞ்சி உணவு மற்றும் தேநீரின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக அமையும். கனவு வேதத்தின்படி, நீங்கள் இஞ்சி சாப்பிடுவது போன்று கண்டால், உங்கள் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என்று அர்த்தம்.
6) கனவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நீங்கள் கண்டால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியான, மனதிற்கு குளிர்ச்சியான இதமளிக்கக்கூடிய விஷயங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.
Read More: Gold Silver Rate : ‘ஜூன் மாதத்தில் அதிரடியாக சரியும் தங்கத்தின் விலை’ உற்சாகத்தில் நகை பிரியர்கள்..!