”உனக்கு என்னைவிட அவனுங்க முக்கியமா போச்சோ”..? கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவிக்கு நேர்ந்த சோகம்..!!
பலருடன் கள்ளத்தொடர்பு தொடர்பு வைத்திருந்த மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம், தாய் மூகாம்பிகை நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் கோபால்ராஜ் (33). இவர், அதே பகுதியில் காயலாங்கடை நடத்தி வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி (26) என்ற மனைவியும், மாரிக்கனி (10), முத்துஇசக்கி (6) ஆகிய மகள்களும் உள்ளனர். இந்நிலையில், மனைவி பரமேஸ்வரி பலருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கணவருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. ஆனாலும், பரமேஸ்வரி கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கணவன், கோபால்ராஜ் தனது மகள்கள் கண் எதிரிலேயே மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டை பூட்டி விட்டு இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு திருநின்றவூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் விட்டுவிட்டு மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
பின்னர், போலீசில் சரணடைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் பூட்டை உடைத்து பரமேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, கோபால்ராஜ் நேற்றிரவு மணிமங்கலம் போலீசில் சரணடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபால்ராஜியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.