இஞ்சியின் தோலில் விஷம் இருக்கா.!இஞ்சியை தோல் நீக்காமல் சமையலில் பயன்படுத்தலாமா.? ஆய்வுகள் சொல்வதென்ன.?
இங்கு நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு மூலப் பொருளாகும். பெரும்பாலும் அசைவம் சமைக்கும் அனைவரும் இஞ்சியை பூண்டுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்துவது வழக்கம். எனினும் கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு பெரும்பாலானவர்கள் இஞ்சியை அனேக உணவுகளிலும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவற்றில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் செரிமானத் தன்மை ஆகியவை இவற்றிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நாம் அனைவரும் சமையலின் போது இஞ்சியை தோல் நீக்கியே பயன்படுத்துகிறோம். ஏனெனில் இஞ்சியின் தோலில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருப்பதாக பரவலாக நம்பப்பட்டு வந்தது.
ஆனால் உண்மையிலேயே இஞ்சியின் தோலில் நச்சுத்தன்மைக்கு எதிராக அதிக நன்மை பயக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மூலக்கூறுகளை நிறைந்து இருக்கிறது. இஞ்சியில் இருப்பதை விட இரண்டு மடங்கு பாலிபினால் இஞ்சியின் தோளில் நிறைந்திருக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உருவாக்கத்தில் இந்த மூலக்கூறுகள் முக்கிய பங்கு வகிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றில் ஆல்ஃபா ஸின்ஜிப்ரெய்ன் என்ற மூலக்கூறுகளும் அதிக அளவில் இருக்கிறது. மேலும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் இங்கேயும் தொழில் நிறைந்திருக்கின்றன .
இதனால் இஞ்சி தோலின் சுவை பிடித்திருந்தால் தாராளமாக அவற்றை உணவுடன் பயன்படுத்தலாம். பொதுவாக இஞ்சியின் மீது படர்ந்து இருக்கும் அழுக்கு, தூசு மற்றும் அவற்றின் அதிகப்படியான வாசம் காரணமாகவே அவற்றின் தோள்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. தற்காலங்களில் வலம் வரும் பொய்யான செய்திகளை போல இஞ்சி தோலில் விஷம் எதுவும் இல்லை என தனது ஆய்வின் மூலம் நிரூபித்து இருக்கிறார் ஹார்வர்டு யூனிவர்சிட்டியில் உயர் மருத்துவ துறையில் டாக்டர் பட்டம் பெற்ற கஞ்சன் கோயா. எனவே அதிகமான சத்துக்கள் தேவைப்பட்டால் தாராளமாக இஞ்சியை தோலுடன் சமையலுக்கு பயன்படுத்தலாம்.