முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செயற்கை குளிர்பானங்களில் என்னென்ன கலக்கப்படுகிறது தெரியுமா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

Even educated people are not aware that soft drinks can actually cause stomach problems.
04:18 PM Aug 14, 2024 IST | Chella
Advertisement

இளநீர், சர்பத் என்று இயற்கை பானங்கள் மறைந்து செயற்கை குளிர்பானங்கள் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அதிகம் வந்துவிட்டன. குறிப்பாக 'எனர்ஜி ட்ரிங்க்' என்ற பெயரில் ஏராளமான குளிர்பானங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. குளிர்பானங்கள் பருகுவதால் உடல் எடை அதிகரிப்பு, பற்சிதைவு, நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு, எலும்பு தேய்மானம் என உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால், குளிர்பானத்தின் சுவை நாக்கில் ஒட்டிவிட்டதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை தொடர்ந்து குடிக்கின்றனர்.

Advertisement

வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் கூட குளிர்பானங்களை குடிக்கும் பழக்கத்தை சிலர் விடுவதில்லை. ஆனால், உண்மையில் குளிர்பானங்கள் வயிற்றுப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியவை என்ற விழிப்புணர்வு படித்த மக்களிடம் கூட இல்லை. பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பாடு முடித்த பின்னும், அலுவலக சந்திப்புகளிலும் என நவீன பானமாக இந்த குளிர்பானங்கள் உள்ளன. செயற்கை குளிர்பானங்களில் ரசாயனம், சர்க்கரை, தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் உடலுக்கு எந்தவித நன்மைகளும் இல்லை. அதில், கலக்கப்படும் ரசாயனங்களே தனிப்பட்ட சுவைக்குக் காரணம். 

குளிர்பானங்களை தொடர்ந்து அருந்துவதால் கல்லீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் கல்லீரலே பாதிக்கப்படுவதால், உடலில் கொழுப்புகள், நச்சுகள் சேர்ந்து பலவித நோய்கள் ஏற்படுகின்றன. அடுத்ததாக பற்களும் பாதிக்கப்படுகின்றன. சூப்பர் மார்க்கெட்டுகள், அனைத்து பலசரக்கு கடைகள், ஆன்லைன் ஸ்டோர்கள், ஸ்டார் உணவகங்கள் என பெரும்பலாக மக்கள் செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் குளிர்பானங்கள் கிடைக்கும் என்ற அறிவிப்பு முக்கியமான காரணம். 

அடுத்ததாக குளிர்பானங்கள் அதிகளவில் மார்க்கெட்டிங் செய்யப்படுவதால் அனைத்து ஊடகத்தின் வாயிலாகவும் மக்களை சென்றடைகிறது. இது மக்களின் மனதில் நன்றாக பதிந்துவிடுகிறது. ஒருமுறை பயன்படுத்திப் பார்க்கலாம் என்று தொடங்கி பலரும் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். வண்ண நிறங்களில் கிடைப்பதால் குழந்தைகளும் அதற்கு அடிமையாகின்றனர். அடுத்ததாக குளிர்பானங்களை மீண்டும் மீண்டும் அருந்துவதற்கு அதில் உள்ள ஒரு ரசாயன போதைப் பொருள் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது, குறிப்பிட்ட ரசாயனத்தின் சுவையே உங்களை மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டுகிறது. 

எனவே, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குளிர்பானங்களை கொடுத்துப் பழக்க வேண்டாம், இளைஞர்களும் பெரியவர்களும் படிப்படியாக குளிர்பானங்களை அருந்துவதை குறைக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read More : ’அம்மா என்னால முடியல’..!! கடனை செலுத்த முடியாததால் பெற்ற மகளை விபச்சாரத்திற்கு தள்ளிய தாய்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Tags :
இளநீர்குளிர்பானங்கள்
Advertisement
Next Article