முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குடும்பத்துடன் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்கிறாரா முதல்வர் முக.ஸ்டாலின்..!! தீயாய் பரவும் செய்தியின் உண்மை நிலை என்ன..?

07:44 AM Apr 27, 2024 IST | Chella
Advertisement

மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். காலையில் நடைபயிற்சி செய்யும் போதும், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர், ஓய்வெடுக்கும் வகையில் ஒரு வார பயணமாக, மாலத்தீவு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாக செல்லும் அவர், அரசு பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். பிரதமர் மோடி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின. பிரதமரின் பயணம் காரணமாக கடந்த 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடம் பிடித்தது. இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மாலத்தீவின் 3 அமைச்சர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்ததை தொடர்ந்து இந்தியர்கள், மாலத்தீவை புறக்கணித்தனர். இதையடுத்து, ஒரே நாளில் மாலத்தீவு ஓட்டல்களில் 7,500 முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். மாலத்தீவு செல்லும் விமானங்களில் 2,300 டிக்கெட்டுகளையும் இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர்.

அதோடு மாலத்தீவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், "முதலமைச்சர் மாலத்தீவு செல்கிறார் என்பது பொய் செய்தி. பிரதான ஊடகங்கள் தங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரும் தகவல்களை முறையான வழிகளில் உறுதிப்படுத்தி செய்தி வெளியிடுவார்கள் என நம்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : டீப்ஃபேக் வீடியோக்களை உண்மையென நம்பும் 57% பேர்..!! 31% பேர் பணத்தை இழந்துள்ளனர்..!! வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!

Advertisement
Next Article