முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Haryana | கவிழ்கிறதா பாஜக ஆட்சி.? ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சை எம்எல்ஏக்கள்.!! பரபரப்பான தகவல்.!!

09:21 PM May 07, 2024 IST | Mohisha
Advertisement

.மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் ஹரியானாவில் மாறும் பாரதிய ஜனதா அரசு மைனாரிட்டி அரசாக மாறி இருக்கிறது. எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டப்பேரவைக்கு கொண்டுவரக் கூடாது என்ற விதியால் அரசு கலைக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

லோக்சபா தேர்தல் நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் ஆச்சரியமான நிகழ்வு சரியான சட்டசபையில் நடைபெற்றுள்ளது. ஹரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வருவதாக மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று அறிவித்தனர். சோம்பிர் சங்வான், ரந்தீர் கோலன் மற்றும் தரம்பால் கோண்டர் ஆகிய மூன்று எம்எல்ஏக்களும் தேர்தலின் போது காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் முன்னிலையில் ரோஹ்தக்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மூவரும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றதாக அறிவித்தனர். மேலும் இது குறித்து பேசிய கோண்டர் "அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். நாங்கள் காங்கிரஸுக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோம்," என்று கூறினார், விவசாயிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய உதய் பன், "சோம்பிர் சங்வான், ரந்தீர் சிங் கோலன் மற்றும் தரம்பால் கோண்டர் ஆகிய மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று, காங்கிரசுக்கு ஆதரவளித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையில் தற்போது 88 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜக 40 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்பதையும் நான் கூற விரும்புகிறேன். பாஜக அரசு முன்பு ஜேஜேபி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற்று இருந்தது. ஆனால் தற்போது ஜேஜேபி மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.

நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக தற்போது மைனாரிட்டி அரசாக உள்ளது. ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை என்பதால் சைனி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் சரியான அளவில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பான் தெரிவித்துள்ளார்.

சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்போது ஆளும் பாஜக மைனாரிட்டி அரசாக உள்ளது. எனினும் அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி கரியானா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாய்க்கடுப்பு நடைபெற்று உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு கோர முடியாது.

ஏனெனில் விதிகளின்படி இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்புகளுக்கு மத்தியில் குறைந்தபட்சம் 6 மாத கால இடைவெளி இருக்க வேண்டும். எனவே 2024 செப்டம்பர் வரை எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. மேலும் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் அரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலத்தில் பாஜக அரசு பாதுகாப்பாக உள்ளது.

இதுகுறித்து பதில் அளித்துள்ள ஹரியானா மாநில முதல்வர் காங்கிரஸ் கட்சியை சிலரின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளது என்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்

Read More: PMO Modi | “ராமர் கோவிலை பாதுகாக்க பாஜக 400 இடங்களுக்கு மேல் ஜெயிக்க வேண்டும்..” பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு.!!

Advertisement
Next Article