For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கைது செய்வது தான் ஜனநாயகமா? மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் - தவெக தலைவர் விஜய் கண்டனம்..!

Is arrest democracy? People will not have fun for long - Thaveka leader Vijay condemns..!
06:40 PM Dec 30, 2024 IST | Kathir
கைது செய்வது தான் ஜனநாயகமா  மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்   தவெக தலைவர் விஜய் கண்டனம்
Advertisement

அண்ணா பல்லைக்கழக மாணவி சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் இன்று கைப்பட கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை நகல் எடுத்து தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனா். தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள், விஜய் எழுதிய கடிதத்தை விநியோகம் செய்து வருகின்றனா். அந்த வகையில், சென்னை தி.நகரில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடித நகல்களை விநியோகம் செய்தனா்.

Advertisement

அப்போது அனுமதியின்றி இதுபோல் செயல்பட்டதாக கூறி தவெகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா். அப்போது அவர்களை காண தவெக கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றார். அந்த சமயத்தில் அவரையும் போலீசார் கைது செய்து தியாகராய நகரில் உள்ள மண்டபத்தில் தொண்டர்களுடன் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தவெக தொண்டர்கள் கைது செய்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? என்ற கேள்வியையும் விஜய் எழுப்பியுள்ளார்.

இது குறித்து தவெக தலைவர் விஜயின் கண்டனப் பதிவில், "தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Read More: கண்ணாடி பாலத்தை திறந்து வைத்து, இயற்கை அழகை நடந்து ரசித்த முதல்வர் ஸ்டாலின்…!

Tags :
Advertisement