For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"அண்ணாமலை போன்ற அறிவாளியா நடிகர் விஜய்.?"… நடிகை ஆர்த்தி சர்ச்சை பேட்டி.!!

04:37 PM Apr 16, 2024 IST | Mohisha
 அண்ணாமலை போன்ற அறிவாளியா நடிகர் விஜய்   … நடிகை ஆர்த்தி சர்ச்சை பேட்டி
Advertisement

மலையாளத்தில் குழந்தையின் நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஆர்த்தி. தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானார். தனுஷ் நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் இவர் நடித்த திருக்காணி கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

தனுஷ் விஜய் விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களிலும் கதாநாயகிகளுக்கு தோழி மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது கணவருடன் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தெரிவித்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியின் போது பேசிய ஆர்த்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளவிற்கு நடிகர் விஜய்க்கு அரசியல் அறிவு இருக்கிறதா என தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கு இருக்கும் நம்பர் ஒன் இடத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வர முடிவு எடுத்தது மிகவும் தைரியமான முடிவு என்று பாராட்டினார்.

மேலும் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் பாஜகவின் அண்ணாமலை தான் என்று குறிப்பிட்ட இவர் பாஜக தலைவர் அண்ணாமலை வருங்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய ஆற்றல் உடையவர் எனவும் தெரிவித்துள்ளார். அண்ணாமலை தலைமை ஏற்ற பிறகு தமிழகத்தில் பாஜக குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்திருக்கிறது எனவும் கூறி இருக்கிறார்.

Read More: ’தமிழக நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்’..!! சர்ச்சையை கிளப்பிய வடமாநில மாணவர்கள்..!!

Advertisement