முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’முதலிரவு வீடியோவை மட்டும் தான் இர்பான் வெளியிடல’..!! ’எல்லாம் பணம் இருக்க திமிரு’..!! விளாசிய பிரபலம்..!!

Veteran journalist Bismi has criticized popular YouTuber Irfan.
08:11 AM May 23, 2024 IST | Chella
Advertisement

பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் அறிவித்திருந்தார். இந்த செய்தி இணையத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி, இர்பானை கடுமையாக விளாசி உள்ளார்.

Advertisement

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிஸ்மி, இந்த விஷயத்தில் இர்பான் கைது செய்யப்பட வேண்டுமா? என்றால் நிச்சயம் அவர் கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு குறைந்தபட்சம் தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், இர்பான் யார் என்று தெரிந்தவர்களுக்கு அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பது தெரியும். அதற்கு காரணம் எம்பி கனிமொழியை ஒருமுறை இர்பான் பேட்டி எடுத்தார். அந்த வகையில், அவரின் குட்லுக்கில் இர்பான் இருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என். ரவியின் நன்மதிப்பையும் அவர் பெற்றிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், இர்பானின் கார் மோதி ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த காரை டிரைவர் ஓட்டி வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள், அந்த காரை இர்பான் ஓட்டிவந்தார் என்றும், விபத்து நடந்த பின் தான், அவர் காரை விட்டு ஓடியதாக சொல்லப்பட்டது. அந்த காரை இர்பான் ஓட்டியிருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏன் என்றால், அது உயர்ரக கார். அந்த காரை டிரைவரை வைத்து ஓட்ட வாய்ப்பு இல்லை.

அதுமட்டுமின்றி, விபத்து நடந்த சில நாட்களிலேயே அந்த கார் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதில் இருந்தே அவர் எந்த அளவிற்கு அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்பது தெரிகிறது. தற்போது தனது குழந்தையின் பாலினத்தை துபாய்க்கு சென்று பார்த்துவிட்டு, இங்கு வந்து அறிவித்துள்ளார். பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு தான் இந்தியாவில் பாலினத்தை அறிய தடை விதிக்கப்பட்டது. ஆனால், இர்பானின் இந்த செயலால், பணம் வைத்திருப்பவர்கள் துபாய்க்கு சென்று என்ன குழந்தை என்று பார்த்துவிட்டு அழிக்க வாய்ப்புள்ளது. இதற்கு அவர் வழிவகை செய்திருக்கிறார்.

இர்பான் தற்போது அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளார். ஆனால், அந்த வீடியோவை இரண்டு மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ஒரு நல்ல விஷயத்தை பார்க்கும் எண்ணம் மக்களிடம் இல்லாமல் போய்விட்டது. ஒரு பிரபலம் எதை வாங்கி வீடியோ எடுத்தாலும் அதைப் பார்க்கும் மனநிலை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இவர் ஆரம்பத்தில் புட் ரிவ்வியூவராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தை பதிவு செய்ய தொடங்கிவிட்டார். அண்மையில் அவருக்கு நடந்த திருமணத்தில் தனது முதல் இரவு வீடியோவை தவிர அனைத்தையும் பதிவு செய்தார். இதையும் பார்க்க ஒரு கூட்டம் இருக்கிறது என்று பிஸ்மி தனது வேதனையை பதிவு செய்தார்.

Read More : உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா..?நீங்கள் இதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்..? மறந்துறாதீங்க..!!

Advertisement
Next Article