இனி ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது ரொம்ப ஈஸி..!! - சூப்பர் பிளானை கையில் எடுத்த IRCTC
இந்தியன் ரயில்வே (Indian Railways) தொடர்ந்து புதிய வசதிகயை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு புதிய வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பயனர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வரும் சில பிரச்சனைகளை சரி செய்து, டிக்கெட் புக்கிங் திறனை மேம்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது ஐஆர்சிடிசி (IRCTC). இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஐஆர்சிடிசி செயலி அல்லது வெப்சைட் மூலம் தான் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனாலும் சில நேரங்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்குள் பல சிரமங்கள் வந்துவிடும். அதேபோல் தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பயணியின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்து சப்மிட் கொடுத்தால் அடுத்த பக்கத்திற்குச் செல்ல நீண்ட நேரம் எடுக்கும்.
எனவே ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதுபோன்ற டெக்னிக்கல் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க செயலியை மேம்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் தான் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அதாவது தற்போது ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியை மேம்படுத்த ரயில்வே அமைப்பு முடிவு செய்து இருக்கிறது.
. அதாவது ஐஆர்சிடிசி தளத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டதாகவும் மார்ச் 2025-இல் இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே இதன் மூலம் பயணிகள் டிக்கெட் புக் செய்யும் போது எந்தவொரு சிக்கலும் இருக்காது என்றும், குறுகிய நேரத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பணம் கழிக்கப்பட்டு டிக்கெட் வராமல் போகும் பிரச்சனையும் சீர் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே வரும் காலங்களில் பயணிகள் எந்த சிரமமும் இன்றி டிக்கெட் புக் செய்வது உறுதிப்படுத்தப்படும் என்றும் ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக டிக்கெட் புக்கிங் திறனை ஒரு நிமிடத்திற்கு 25 ஆயிரம் என்று இருப்பதை 2.25 லட்சமாக உயர்த்த ரயில்வே முடிவு செய்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவு செய்யும் அமைப்பின் திறனை மேம்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Read more ; டிகிரி முடிச்சிருக்கீங்களா.. பிரபல அமேசான் நிறுவனத்தில் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..