முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஈரான் - இஸ்ரேல் போர்..!! இந்தியர்களே பாதுகாப்பா இருங்க..!! வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!

02:28 PM Apr 13, 2024 IST | Chella
Advertisement

ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவும் போர் சூழலால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கடந்த 1ஆம் தேதி ஈரான் துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஈரானின் ராணுவத் தளபதிகள் இருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ”இந்தியர்கள் யாரும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஈரான், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதி முக்கியத்துவம் வாய்ந்த காரணங்கள் இன்றி எங்கும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More : தனது பாணியில் அண்ணாமலையை வறுத்தெடுத்த மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ..!! அவர் ஒரு சுஜுபி..!!

Advertisement
Next Article