For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

IPL 2024 அட்டவணை வெளியானது..!! முதல் போட்டியே சென்னையில் தான்..!! CSK vs RCB..!! எப்போது தெரியுமா..?

06:06 PM Feb 22, 2024 IST | 1newsnationuser6
ipl 2024 அட்டவணை வெளியானது     முதல் போட்டியே சென்னையில் தான்     csk vs rcb     எப்போது தெரியுமா
Advertisement

Indian Premier League: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் IPL போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த வகையில், இந்தாண்டு 17-வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

அதன்படி, மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதன்படி, அதன்படி, முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை தான் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் முதல் 21 போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2 போட்டிகள் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

அதேபோல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மார்ச் 24 ஆம் தேதி மோதுகின்றன. இந்நிலையில், சென்னையில் முதல் போட்டி தொடங்குவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2009, 2011, 2012, 2018, 2019, 2020, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் முதல் போட்டியில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: IPL 2024 schedule: In view of the Lok Sabha elections 2024, the BCCI has released the schedule of 21 matches in the first 15 days for now

Read More : Kerala | இனி ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம ஊதியம்..!! முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!!

Advertisement