For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் வரலாறு!. முதல் சீசனிலேயே ரூ.12 கோடி!. அனைத்து அணிகளாலும் ஏலம் எடுக்கப்பட்ட ஒரே வீரர் யார் தெரியுமா?

IPL History!. 12 crores in the first season itself!. Do you know who is the only player to be bid by all teams?
06:10 AM Nov 26, 2024 IST | Kokila
ஐபிஎல் வரலாறு   முதல் சீசனிலேயே ரூ 12 கோடி   அனைத்து அணிகளாலும் ஏலம் எடுக்கப்பட்ட ஒரே வீரர் யார் தெரியுமா
Advertisement

IPL History: ஐபிஎல் 2024 மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட வீரர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 2025ம் ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தில், ரிஷப் பந்த் ரூ. 27 கோடி என ஐபிஎல் வரலாற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸி ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டார். அடுத்ததாக ஷ்ரேயாஸ் ஐயர் ரூ. 26 கோடி, வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடி என ஏலம் எடுக்கப்பட்டன. ஆனால் ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு வீரருக்காக அனைத்து உரிமையாளர்களும் போட்டிப்போட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு அறிமுகமானது. 2007ல் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றவுடன் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் ரசிகர்களுக்கு ஐபிஎல் பற்றிய பெரிய ஆர்வம் இல்லாததால் ஒவ்வொரு அணியும் அந்த ஊர் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஒரு வீரரை தேர்வு செய்யலாம் என்று பிசிசிஐ தெரிவித்து இருந்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் சச்சின் டெண்டுல்கரை முதன்மை வீரராக தேர்வு செய்தது. கேகேஆர் கங்குலியையும், ஆர்சிபி ராகுல் டிராவிட்டையும், பஞ்சாப் கிங்ஸ் யுவராஜ் சிங்கையும் தேர்வு செய்தனர்.

இந்நிலையில் சேவாக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்மை வீரராக தேர்வு செய்ய பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் டெல்லி அணி முந்திக்கொண்டு சேவாக்கை முதன்மை வீரராக தேர்ந்தெடுத்தது. பிறகு ஏலத்தில் தோனியை எடுக்க 8 அணிகளும் போட்டிபோட்டன. ஒருகட்டத்தில் தோனியின் விலை 7 கோடியை தாண்டியது. இதனால் ஒவ்வொரு அணிகளாக பின்வாங்க தொடங்கின. ஆனாலும் சென்னை மற்றும் மும்பை இடையே கடும் போட்டி நிலவியது. ரூ.12 கோடி என்ற மதிப்பிற்கு வந்ததும், இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ஏலத்தில் எடுத்தது.

Readmore: பரபரப்பு…! அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு… உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

Tags :
Advertisement