ஐபிஎல் நாயகி!! கிரிக்கெட் ரசிகர்களின் க்ரஸ்!! யார் இந்த காவ்யா மாறன்?
2024 ஐபிஎல் தொடரில் இளைஞர்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன்.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு மேட்ச் தொடங்க உள்ளது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் நீண்ட நாள்களுக்கு பின் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளன. கேகேஆர் அணி 2014ஆம் ஆண்டுக்கு பின்னரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016ஆம் ஆண்டிலும் கோப்பையை கைப்பற்றியிருந்தன. இதுவரை கேகேஆர் 2 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன.
இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் அதிக கவனம் பெற்றவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன்தான். SRH விளையாடும்போது காவ்யா மாறன் கொடுத்த ஒவ்வொரு ரியாக்ஷன்ஸூம் அதிகளவில் இளைஞர்களை கவர்ந்தது. மேலும், அவரது புகைப்படங்கள் இன்ஸ்டா, X தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் ட்ரெண்டானது. இந்த ஐபிஎல் போட்டியில் அதிக கவனம் பெற்ற காவ்யா மாறன் குறித்து விரிவாக பார்க்கலாம்.
யார் இந்த காவ்யா மாறன்?
காவ்யா மாறன், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது இது முதல் முறையல்ல. 2018 ஆம் ஆண்டில், ஐபிஎல் போட்டிகளின்போது அவர் முதன்முதலில் காணப்பட்டார். அப்போதே ட்ரெண்டிங்கில் இருந்தார் காவ்யா. 2019 ஏலத்தின்போதும் காவ்யா பங்கேற்றிருந்தார். 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னையில் பிறந்தர் காவ்யா மாறன். தற்போது அவருக்கு வயது 31. 'சன் நெட்வொர்க்' நிறுவனர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறனின் மகள் ஆவார். அவரது தாத்தா முரசொலி மாறன் முன்னாள் மத்திய வர்த்தக அமைச்சராகவும், அவரது மாமா தயாநிதி மாறனும் முந்தைய UPA அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளனர். மிக முக்கியமாக, காவ்யா மாறன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய உறவினர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் திரைப்பட தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் உறவினர் ஆவார்.
வணிக புத்திசாலித்தனம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் பெற்ற மாறன் குடும்பத்தின் புகழ்பெற்ற மரபை அப்படியே பின்பற்றும் வகையில்,காவ்யாவின் பாதையும் வணிகம் சார்ந்தே வடிவமைத்துள்ளது. காவ்யா சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ படித்தார்.
தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பு:
2018ஆம் ஆண்டு முதல் காவ்யா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தைக் கையாள்வதைத் தவிர, அவர் சன் நெட்வொர்க், சன் மியூசிக் மற்றும் எஃப்எம் சேனல்களின் செயல்பாடுகளையும் கவனித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்றபோது பொழுதுபோக்கு துறையில் அவரது மாறுபட்ட ஈடுபாடு முன்னணியில் வந்தது.
Read More: ‘ஆக்ஷன் கிங் அர்ஜூன் மகள் திருமணம்..!!’ முதல்வர் ஸ்டாலினுக்கு குடும்பத்தோடு சென்று நேரில் அழைப்பு!