முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சேப்பாக்கத்தில் IPL கிரிக்கெட்..!! மார்ச் 22, 26ஆம் தேதிகளில் அதிரடி மாற்றம்..!!

07:52 AM Mar 21, 2024 IST | 1newsnationuser6
Advertisement

ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளை (மார்ச் 22) தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதேபோல், 26ஆம் தேதி சென்னை அணி குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டிகளை முன்னிட்டு, போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22 மற்றும் 26ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதாவது, மாலை 5 முதல் இரவு 11 மணிவரை இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும். கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் பகுதியில் வாகனங்கள் எளிதாக வரும் வகையில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால்ரோடு), பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜாசாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்களுக்கும் வாகன நிறுத்த இடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More : Rain | தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..!! 26ஆம் தேதி வரை மழை..!! வானிலை மையம் தகவல்..!!

Advertisement
Next Article