ஐபிஎல் 2025!. தோனியை தக்கவைக்க மாட்டோம்!. சிஎஸ்கே CEO முக்கிய அப்டேட்!
Dhoni: 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை தக்கவைக்க, அன்கேப்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்துவது நிச்சயமற்றது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஇஓ) காசி விஸ்வநாதன் கூறினார்.
இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 18வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இந்தமுறை மெகா ஏலத்தின் மூலம் வீரர்கள் தேர்வு நடைபெறவுள்ளது.2025 -27 வரையிலான வீரர்களை தேர்வு செய்யும் ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் தற்போது மெகா ஏல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், ஐபிஎல் வரலாற்றில் இல்லாத புதிய விதிமுறைகள் அறிவிப்பாகி உள்ளன. அதாவது, மெகா ஏலத்துக்கு முன்பாக ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம், அல்லது ரைட் டூ மேட்ச் விதிப்படி பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதிகபட்சமாக சர்வதேச போட்டிகளில் விளையாடிய 5 வீரர்களையும், சர்வதேச போட்டிகளில் விளையாடாத(அன்கேப்ட்) வீரர்கள் 2 பேரையும் தக்கவைத்து கொள்ளலாம் என இந்த விதிமுறை கூறுகிறது.
இதன்மூலம் தல தோனி , மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆகிறது. எனவே, இவர் அன்கேப்ட் வீரராக இந்த சீசனில் பங்கேற்கலாம். மேலும், தல தோனி ஒருவருக்காக இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பரவலான கருத்து நிலவி வருகிறது.
இந்தநிலையில்,தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து பதிலளித்துள்ளார் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன். ”தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைப்பது குறித்து எங்களால் தற்போது முடிவு எடுக்க முடியாது. இன்னும் சில நாட்களில் நான் அவரை சந்திக்க இருக்கிறேன். அதன் பின்னர் முடிவு கிடைக்கும்” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
Readmore: இன்றுமுதல் தொடங்கும் நவராத்திரி விழா!. கொலு வைக்க உகந்த தேதி, நேரம் எப்போது?