மீண்டும் தல தரிசனம்!. அன்கேப்ட் பிளேயராக களமிறங்குவாரா தோனி?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Dhoni: சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக பிசிசிஐ அறிவித்ததையடுத்து, சிஎஸ்கே வீரர் தல தோனி அன்கேப்ட் பிளேயராக 2025 சீசனில் களமிறங்குவார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற சர்ச்சைகள் நிலவி வந்தன. இந்தநிலையில், ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடர்பாக நேற்று பெங்களூரு நடைபெற்ற கூட்டத்தில் பிசிசிஐ ஒரு புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. அதில், சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்கேப்ட் பிளேயர் மூலம் தோனி 2025ம் ஆண்டு சீசனில் விளையாடவுள்ளார். குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள முடியும். 42 வயதாகும் தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவிக்காத நிலையில், பிசிசிஐயின் புதிய விதியால் மீண்டும் தல தரிசனத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Readmore: கடும் வெள்ளம், நிலச்சரிவு!. பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு!. 69 பேரை காணவில்லை!. நேபாளத்தில் சோகம்!