For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2025 மெகா ஏலம்..!! டெல்லி அணியில் இருந்து விலகல்..? ரிஷப் பந்துக்கு குறிவைத்த ஆர்சிபி..!!

Virat Kohli's Royal Challengers Bangalore are planning to take Rishabh Pant if he comes to the auction.
07:45 AM Oct 25, 2024 IST | Chella
ஐபிஎல் 2025 மெகா ஏலம்     டெல்லி அணியில் இருந்து விலகல்    ரிஷப் பந்துக்கு குறிவைத்த ஆர்சிபி
Advertisement

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியிலும் உள்ள சில முக்கிய வீரர்கள் வேறு அணிக்கு மாற இருக்கின்றனர். கேஎல் ராகுல் லக்னோ அணியில் இருந்து விலகி ஆர்சிபி அணிக்காக விளையாட இருக்கிறார். அதேபோல், ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெல்லிக்கும், ரிஷப் பந்த் சென்னை அணிக்கும் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில், ரிஷப் பந்த் ஏலத்திற்கு வந்தால் அவரை விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எடுக்க திட்டம் போட்டு வருகிறது. அக்.31-க்குள் எந்த எந்த வீரரை தக்க வைக்க போகிறார்கள் என்பதை ஒவ்வொரு அணியும் தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பந்த் தனது எக்ஸ் தளத்தில், நான் ஏலத்திற்கு வந்தால் எவ்வளவு தொகைக்கு போவேன் என கடந்த சில தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.

சிலர் விளையாட்டிற்காக பந்த் இப்படி போட்டு இருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் பந்த் நிச்சயம் இருப்பார் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆர்சிபிக்காக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருந்தார் தினேஷ் கார்த்திக். அவர் கடந்த ஆண்டுடன் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஒரு விக்கெட் கீப்பிங் பேட்டர் தேவைப்படுகிறது.

பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, இந்தியன் பிரீமியர் லீக் மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் ரியாத்தில் நடைபெறுகிறது. ரிஷப் பந்த் ஒருவேளை ஆர்சிபி அணிக்கு வந்தால் அவர்களின் விக்கெட் கீப்பர் தேவை மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெண்டுமே சரியாகிவிடும். மேலும், கேப்டன்சியும் கொடுக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுவரை கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணிக்கு கோப்பையை வாங்கி தர பந்த் உதவலாம். இந்நிலையில், இந்த சாத்தியமான நகர்வு யதார்த்தமாக மாறுமா என்பதை பார்க்க ஆர்சிபி-யின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Read More : ’பேசிக்கிட்டு இருக்கும்போது இந்த மாதிரி பண்ணாத’..!! பேட்டியின்போது செம டென்ஷனான புஸ்ஸி ஆனந்த்..!! நடந்தது என்ன..?

Tags :
Advertisement