ஐபிஎல் 2025!. டு பிளெசிஸ் அவுட்!. கே.எல்.ராகுல் இன்!. பெங்களூரு அணியின் கேப்டனாக நியமனம்?.
KL Rahul: ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து கே.எல். ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கே.எல்.ராகுலுக்கும் லக்னோ உரிமையாளருக்கும் இடையேயான உறவு மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது, லக்னோ அணி தோல்வியடைந்ததையடுத்து, லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா, மைதானத்திலேயே அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலிடம் ஆக்ரோஷமாக விவாதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
ஆனால் இருவரும் கருத்துவேறுபாடுகளை மறுத்தனர். இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மீண்டும் இணைவதில் கே.எல்.ராகுல் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், லக்னோ அணியும், வரவிருக்கும் 2025ம் ஆண்டு மேக ஏலத்தில் ராகுலை கேப்டனாக தக்கவைத்துகொள்ளுமா என்பதும் நிச்சயமற்றதாகவே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் பல அணிகளில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அந்தவகையில் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் அணியை விட்டு விலகுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் மீண்டும் பெங்களூரு அணிக்கு செல்வார் என்றும் டு பிளெசிஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
ராகுல், 2022ல் அறிமுக சீசனில் இருந்து லக்னோ அணியின் தலைமியில் இருந்து தொடர்ந்து பிளே ஆஃப் க்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தார். 2 முறை நாக் அவுட் சுற்றுகளில் அந்த அணி தடுமாறியது. 2024 சீசனில் குறைந்த புள்ளியை பெற்றது. லக்னோ அணி லீக் நிலைகளில் 7வது இடத்தை பிடித்தது. இது அவர்களின் முந்தைய செயல்திறன்களின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். பெங்களூருவை சேர்ந்த ராகுல், உள்ளூர் விளையாட்டுகளில் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார், அவரது ஐபிஎல் பயணம் 2013ல் ஆர்சிபி அணியுடன் தொடங்கியது. ஆனால் பின்னர் அவர் ஐதராபாத்தில் சேர்க்கப்பட்டார். 2016ல் அவர் மீண்டும் பெங்களூரு அணிக்கு திரும்பினார்,
Readmore: சூனியத்தால் அதிர்ச்சி!. இளம்பெண்ணின் மண்டை ஓட்டில் இருந்து 77 ஊசிகள் அகற்றம்!.