IPL 2024: முதல் 2 பந்துகளுக்கு பிறகு போட்டியை நிறுத்திய ஸ்பைடர் கேம்.!! பரபரப்பு வீடியோ.! நடந்தது என்ன.?
IPL 2024: இன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்(RR vs LSG) அணிகளுக்கிடையேயான போட்டியில் ஸ்பைடர் கேம் பழுதடைந்ததால் சில நேர தாமதத்திற்கு பின் போட்டி மீண்டும் தொடங்கியது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல்(IPL 2024) தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் (RR vs LSG) அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டி ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்கினர். லக்னோ அணிக்காக முதல் ஓவரை மூஸின் கான் வீசினர்.
இந்த ஆட்டத்தின் முதல் 2 பந்துகள் வீசப்பட்ட நிலையில் போட்டியானது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. மைதானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பைடர் கேமராவுடன் இணைக்கப்பட்ட வயர்கள் அருந்து மைதானத்திற்குள் விழுந்ததால் அவற்றை அப்புறப்படுத்துவதற்கு சில நேரம் தேவைப்பட்டது. இதனைத் தொடர்ந்து போட்டியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
ஸ்பைடர் கேம் என்பது மைதானத்தை பல கோணங்களிலும் படம் பிடிப்பதற்கு அந்தரத்தில் வயர்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் கேமரா ஆகும். இன்றைய போட்டியின் போது இந்த கேமராவின் வயர்கள் அறுந்து மைதானத்தில் விழுந்ததால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்த வீரருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
தடங்கலுக்குப் பின் போட்டி தொடங்கியதும் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழந்தனர். அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சங் மிகச் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தால் என்பதும் குறிப்பிடத்தக்கது.