For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

IPL 2024 | சென்னையில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டி.!! அகமதாபாத்தில் 2 பிளே ஆஃப் ஆட்டங்கள்.!! புதிய அறிவிப்பு.!!

05:31 PM Mar 25, 2024 IST | Mohisha
ipl 2024   சென்னையில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டி    அகமதாபாத்தில் 2 பிளே ஆஃப் ஆட்டங்கள்    புதிய அறிவிப்பு
Advertisement

IPL 2024: ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம்(Chepauk) மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ(BCCI) அறிவித்துள்ளது.

Advertisement

இந்தியன் பிரிமியர் லீக்(IPL) 17-வது சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதியை தொடங்கிய இந்த போட்டி தொடரில் இதுவரை 5 ஆட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த ஐந்து ஆட்டங்களிலும் சென்னை பஞ்சாப் கொல்கத்தா ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் தங்களது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இந்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே வெளியிட்டிருந்தது. மேலும் பொது தேர்தலை முன்னிட்டு ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது.

இந்த புதிய அட்டவணையின் படி ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் 8 ஆம் தேதி முதல் நடைமுறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து விளையாட இருக்கின்றன. மேலும் இந்த வருடத்தின் குவாலிஃபைர் மற்றும் எலிமினேட்டர் போட்டியில் சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற மே மாதம் 26 ஆம் தேதி 12 வருடங்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது .

இந்த வருட ஐபிஎல் தொடரில் தர்மசாலா மற்றும் குவாஹாத்தி நகரங்களும் நான்கு போட்டிகளை நடத்த இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் இரண்டாம் ஹோம் கிரவுண்ட் தர்மசாலா ஆகும். அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரண்டாவது ஹோம் கிரவுண்ட் குவாஹாத்தி என்பது குறிப்பிடத்தக்கது. மே 5 மற்றும் மே 9 தேதிகளில் 2 போட்டிகள் தர்மசாலாவில் வைத்து நடைமுறை இருக்கிறது. மே மாதம் 15 மற்றும் 19 தேதிகளில் 2 போட்டிகள் குவாஹாத்தி நகரில் வைத்து நடைபெற உள்ளது.

இந்த வருட ஐபிஎல் தொடரின் குவாலிபயர் போட்டிகள் மே 21 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 22ஆம் தேதி எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகளும் அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. குவாலிபயர் 2 போட்டி மே 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி 12 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

Read More: Congress | நெல்லை, விளவங்கோடு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு..!! மயிலாடுதுறை என்ன ஆச்சு..?

Tags :
Advertisement