For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

IPL 2024: பிளேஆஃப் சுற்று, எலிமினேட்டர், இறுதிப் போட்டி… ஐபிஎல் 17-வது சீசனில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.!

08:38 PM Mar 21, 2024 IST | Mohisha
ipl 2024  பிளேஆஃப் சுற்று  எலிமினேட்டர்  இறுதிப் போட்டி… ஐபிஎல் 17 வது சீசனில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
Advertisement

IPL 204: ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் நாளை சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி(CSK vs RCB) அணிகளுக்கு இடையேயான போட்டியோடு தொடங்க இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று இலுமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இந்த பதிவில் காணலாம்

Advertisement

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பான இந்தியன் பிரிமியர் லீக்(IPL) என்றழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து தொடங்க இருக்கிறது. ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோத உள்ளன.

2024 ஆம் வருட பொது தேர்தலை முன்னிட்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அட்டவணையின்படி மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி வரை 21 போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(CSK vs RCB) அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

8 அணிகளை கொண்டு நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2022 ஆம் ஆண்டு முதல் புதியதாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் என்ற இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளை கொண்ட தொடராக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும். லீக் போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்றிருக்கின்ற நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கள்: ஐபிஎல் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் குவாலிஃபயர் 1 போட்டிகளில் மோதும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வியடைந்த மற்றொரு அணி குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடும்.

எலிமினேட்டர்: புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள் இலுமினேட்டர் போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதி பெறும். இலுமினேட்டரில் தோல்வியடைந்த அணி தொடரில் இருந்து வெளியேறும்.

குவாலிஃபயர் 2: குவாலிஃபயர் 1 போட்டியில் தோல்வி அடைந்த அணி மற்றும் எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணி ஆகியவை ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக குவாலிஃபயர் 2 போட்டியில் விளையாடும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் 1 வெற்றி பெற்ற அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இறுதிப்போட்டி: குவாலிஃபயர் 1 மற்றும் குவாலிஃபயர் 2 ஆகியவற்றில் வெற்றி பெற்ற அணிகள் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மோதும். வெற்றி பெறும் அணி 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

Read More: Election 2024 | பாஜக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்.!! திருநெல்வேலியில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.!!

Advertisement