IPL 2024!… ஷமிக்கு பதிலாக களமிறங்கும் தமிழக அணி வீரர்!... புதிய கேப்டனுடன் களம்காணும் குஜராத் டைட்டன்ஸ்!
IPL: குஜராத் டைட்டன்ஸ் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக தமிழக அணி வீரர் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. நாளை நடைபெறும் இதன் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , பெங்களூரு அணியும் மோதுகின்றன. அதன் ஒரு பகுதியாக, முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கான மாற்று வீரரை குஜராத் டைடன்ஸ் அணி அறிவித்துள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை 2024 தொடரில், இந்திய அணிக்காக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய முகமது ஷமி, பைனலின் போது கால் வலியோடு விளையாடினார். இதனால், உலகக் கோப்பை முடிந்தப் பிறகு, முகமது ஷமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை திருப்தியளிக்காத நிலையில், லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முகமது ஷமிக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து, இந்தியா திரும்பிவிட்டார். இவரது காயம் குணமாக இன்னமும் மூன்று மாதங்கள் வரை ஆகும் என்பதால், ஐபிஎலில் இருந்து விலகிவிட்டார். முகமது ஷமி இல்லாதது குஜராத் அணிக்கு பெரிய இழப்புதான். ஏற்கனவே, ஹர்திக் பாண்டியாவும் அணியைவிட்டு வெளியேறிவிட்டார். ஷமி, இந்த அணிக்காக 33 போட்டிகளில் 48 விக்கெட்களை கைப்பற்றினார்.
முகமது ஷமி விலகிவிட்ட நிலையில், அவருக்கு மாற்றாக தமிழ்நாடு அணிக்காக விளையாடும் கேரள வீரர் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎலில் மொத்தமே 5 போட்டிகளில்தான் விளையாடி உள்ளார். ஐந்து போட்டிகளும் கொல்கத்தா அணிக்காகதான். சமீபத்தில் விஜய் ஹசாரே டிராபி தொடில், 5 போட்டிகளில் 11 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இவரை, 50 லட்ச ரூபாய் மதிப்பில் குஜராத் அணி சேர்த்துள்ளது. குஜராத் டைடன்ஸ் அணியை விட்டு, ஹர்திக் பாண்டியா விலகிவிட்ட நிலையில், அவருக்கு மாற்றாக, குஜராத் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.