For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

iPhone 14 | சூப்பர் நியூஸ்..!! ’ஐபோன் 14’ மிகக்குறைந்த விலையில் வாங்கலாம்..!! அமேசானில் அதிரடி ஆஃபர்..!!

05:03 PM Mar 11, 2024 IST | 1newsnationuser6
iphone 14   சூப்பர் நியூஸ்     ’ஐபோன் 14’ மிகக்குறைந்த விலையில் வாங்கலாம்     அமேசானில் அதிரடி ஆஃபர்
Advertisement

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல்கள் அதிரடி தள்ளுபடியில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. அதை எப்படி பெற வேண்டும் என்பது குறித்து நாம் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

நீங்கள் உங்கள் முதல் ஐபோனை வாங்கத் திட்டமிட்டால் உடனடியாக இப்போது அமேசானில் இருக்கும் டீல்களை பார்க்க வேண்டும். அதில், ஐபோன்களுக்கு மிகப் பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளனர். ஐபோன் 14 வெளியாகி இப்போது ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இப்போது அந்த மொபைலுக்கு அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடி கிடைத்துள்ளது. ஐபோன் 14 அமேசானில் ரூ.60,000க்கு கீழ் இப்போது விற்பனையாகிறது. அதிலும் எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கி சலுகைகள் எல்லாம் சேர்த்தால் ரூ.50,000 கீழ் இந்த ஐபோனை உங்களால் வாங்க முடியும்.

இந்த ஐபோன் வெளியான போது இதன் விலை ரூ.79,900ஆக இருந்தது. ஐபோன் 15 வெளியான பிறகு இதன் விலை ரூ.69,900ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், இப்போது மேலும் அதன் விலை டிஸ்கவுன்ட் செய்யப்பட்டு ரூ. 58,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமேசானில் நீங்கள் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் மேலும் டிஸ்கவுன்ட் கிடைக்கும். குறிப்பாக, ஐபோன் வைத்திருந்தால் அதிக டிஸ்கவுன்ட் கிடைக்கும். அதிகபட்சம் ஐபோன் 13ஐ நீங்கள் வைத்திருந்தால் உங்களுக்கு ரூ. 27,000வரை தள்ளுபடி கிடைக்கும்.

நீங்கள் ஆக்சிஸ் வங்கியின் கிரெட்டிட் கார்டு வைத்திருந்தால் உங்களுக்குக் கூடுதலாக 5% தள்ளுபடி கிடைக்கும். புதிய மொபைல் வாங்க விரும்புவோர் தவிர்க்கவே முடியாத ஆஃபராக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆப்பிள் ஐபோன் 14 கடந்த 2022 செப்டம்பர் மாதம் வெளியானது. ஐபோன் 14 ஒரு சக்திவாய்ந்த மற்றும் பல வசதிகள் நிறைந்த ஸ்மார்ட்போன் ஆகும். ஐபோன் 14இல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே இருக்கிறது. மேம்பட்ட அனுபவத்தைக் கொடுக்க இதில் மிகவும் மெலிதான பார்டர்களே இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவில் ஹெச்.டி.ஆர் சப்போர்ட்டும் உள்ளது. இந்த டிஸ்ப்ளே அதிகபட்சம் 1200-நிட் வரை பிரகாசமாக இருக்கும். பாதுகாப்புக்காக இதில் ஃபேஸ் ஐடியும் தரப்பட்டுள்ளது.

இந்த மொபைலில் ஐபோன் 14 A15 பயோனிக் சிப் உள்ளது. அதிநவீன இந்த சிப் ஒரு மேம்பட்ட அனுபவத்தை யூசர்களுக்கு தருகிறது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என்று மூன்று ஆப்ஷன்களில் இந்த மொபைல் கிடைக்கிறது. உங்கள் தேவைக்கு ஏற்ப அதைத் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், இந்த மொபைல் iOS 16இல் இயங்குகிறது. அதில் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது. இந்த மொபைலில் நாம் அதிவேக 5ஜி சேவையை பயன்படுத்தலாம். இதில் வைபை, இரட்டை சிம், புளூடூத், ஜிபிஎஸ், லைட்டிங் போர்ட் என அனைத்துமே இருக்கிறது.

போட்டோ மற்றும் வீடியோவை பொறுத்தவரை ஐபோன் 14 இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பிரதான 12MP கேமரா குறைந்த வெளிச்சத்தில் கூட அழகான புகைப்படங்களை எடுக்கக்கூடியது. மேலும் மற்றொரு 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும் உள்ளது. சிறந்த டைனமிக், டால்பி விஷன் மூலம் உயர்தர வீடியோக்களையும் இதில் நாம் எடுக்கலாம்.

Read More : Gobi Manchurian | தமிழ்நாட்டை தொடர்ந்து இந்த மாநிலத்திலுமா..? பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு அதிரடி தடை..!!

Advertisement