முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெறும் ரூ.500 முதலீடு..!! லட்சக்கணக்கில் வருமானம்..!! இந்த சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா..?

01:12 PM May 15, 2024 IST | Chella
Advertisement

குறைவான முதலீட்டில் அதிகபட்ச லாபத்துடன் கூடிய சேமிப்பு திட்டங்களை பற்றி மக்கள் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தபால் நிலையத்தின் குறிப்பிட்ட சேமிப்பு திட்டத்தின் விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

நாட்டில் குறைவான சேமிப்பு முதலீட்டைக் கொண்டு தொடங்கும் திட்டங்கள் அதிக அளவில் இருந்து வருகிறது. குறைந்த முதலீடாக இருந்த போதிலும் அதில் பெறக்கூடிய லாபம் அதிகமாக இருப்பதையே மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.500 முதல் செலுத்தி உங்களின் சேமிப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.

இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சம் வரை ஒரு ஆண்டில் டெபாசிட் செய்து கொள்ளலாம். 15 ஆண்டுகள் இத்திட்டத்தின் முதிர்ச்சி காலமாகும். பயனர்கள் விரும்பும் பட்சத்தில் முதிர்வு காலத்திற்கு பின்னர் மேலும் 5 ஆண்டுகள் இத்திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் ரூபாய் 500 என்ற விகிதத்தின் படி ஒரு ஆண்டுக்கு ரூபாய் 6,000 சேமிக்கப்படும்.

தற்போது வரை இத்திட்டத்திற்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, 15 ஆண்டுகளில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 728 பலனாக கிடைக்கும். திட்டத்தின் முதிர்வு காலத்தை நீட்டித்து 25 ஆண்டுகள் முடிவில் ரூபாய் 4,12,321 ரூபாயை பயனர்கள் பெறுவார்கள். எனவே, குறைந்தபட்ச முதலீடான ரூபாய் 500-ஐ செலுத்தி உங்கள் சேமிப்பை தொடங்கி பயனடையுங்கள்.

Read More : Google Map-இல் இருக்கும் இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இவ்வளவு பயனுள்ளதா..?

Advertisement
Next Article