For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"மாதம் ரூ.12,500/- முதலீடு போதும்.." "15 வருடங்களில் ரூ.40 லட்சம் கைகளில்" அசத்தலான சேமிப்பு திட்டம்.!

08:08 PM Feb 05, 2024 IST | 1newsnationuser7
 மாதம் ரூ 12 500   முதலீடு போதும்     15 வருடங்களில் ரூ 40 லட்சம் கைகளில்  அசத்தலான சேமிப்பு திட்டம்
Advertisement

ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்து அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு முறையான திட்டமிடுதல் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் அனைவருமே சிரமப்பட்டு இருப்போம். நாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை நல்ல சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.

Advertisement

மேலும் இவ்வாறு சேமித்து வைக்கப்பட்ட பணம் நமது எதிர்கால தேவைகளுக்கு உதவுகிறது. வருங்காலங்களில் குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் மருத்துவச் செலவு போன்றவற்றிற்கு சேமிப்பு பணம் உதவும். இவ்வாறு நமக்கு பயன்படும் இந்த சேமிப்பு பணத்தை அதிக லாபம் பெறும் வகையில் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதிர்ச்சி காலத்தில் நமது சேமிப்பு தொகை அதிக லாபத்துடன் நமக்கு கிடைக்கும்.

பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்தின் பணத்தை சேமிப்பதற்கு நமது இளமைக் காலம் முதலே சேமிப்பை தொடங்க வேண்டும். அப்போதுதான் முதிர்ச்சி காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால் 15 வருடங்களில் முடிவில் நமது முதலீட்டுத் தொகை ரூ. 22.50 லட்சம் ஆக இருக்கும் மேலும் இந்தத் திட்டத்தின் படி 7.1% வட்டி தொகையுடன் சேர்த்து ரூ.40.68 லட்சம் முதிர்ச்சி தொகையாக கிடைக்கும்.

பி.பி.எஃப் முதலீடுகள் வருமான வரித்துறை சட்டம் 80C பிரிவின் கீழ் வருவதால் இவற்றிலிருந்து 1.5 லட்ச ரூபாய் வருமான வரிச் சலுகையும் பெறலாம். மேலும் மாதம் 12 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்ய நாள் ஒன்றுக்கு 417 ரூபாய் சேமிப்பு போதுமானதாக இருக்கிறது. 15 வருடங்கள் கழித்து 40 லட்ச ரூபாய் முதிர்வு தொகை கிடைக்கிறது. இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம். மேலும் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டில் பெறப்படும் வட்டிக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை. மத்திய அரசின் புதிய நிதி கொள்கையின்படி சிறு சேமிப்பை ஊக்குவித்து வருவதால் இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம். மேலும் இது பாதுகாப்பான சேமிப்பாகும்.

Tags :
Advertisement