For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

AI செவிலியர்கள் அறிமுகம்!.. வீடியோ கால் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை!

08:20 AM Mar 21, 2024 IST | 1newsnationuser3
ai செவிலியர்கள் அறிமுகம்    வீடியோ கால் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை
Advertisement

AI: ஹிப்போக்ரடிக் நிறுவனம் NVIDIA உடன் இணைந்து வீடியோ கால் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் AI செவிலியர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

ஹெல்த்கேர் உடன் தொழில்நுட்பத்தை இணைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் NVIDIA, ஹிப்போக்ரடிக் இணைந்து AI செவிலியர்கள் அறிமுகப்படுத்துகிறது. இது மனித செவிலியர்களின் செலவில் ஒரு பகுதியிலேயே சேவைகளை வழங்குவதாகவும் வீடியோ அழைப்புகள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவதாலும், சுகாதாரத்துறையில், பெரிய கேம் - சேஞ்சராக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, பயிற்சி பெற்ற செவிலியர்கள் ஊழியர்களின் பற்றாக்குறை சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க சவலாக இருக்கும், இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த முயற்சி புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹிப்போக்ராட்டிக்கின் கூற்றுப்படி, நோயாளிகளுக்கு இயற்கையாகவே உணர்ச்சி ரீதியான தொடர்புகளை நெருக்கமாக பிரதிப்ப உருவாக்குவதற்கு குறைந்த தாமத குரல் தொடர்புகள் முக்கியம். நிறுவனத்தின் ஹெல்த்கேர் ஏஜெண்டுகள், ஹெல்த்கேர்க்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதன் பெரிய மொழி மாதிரிகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹெல்த் சிஸ்டம்ஸ், டிஜிட்டல் ஹெல்த் நிறுவனங்கள் மற்றும் ஃபார்மா தனது ஹெல்த்கேர் ஏஜெண்டுகளை குறைந்த ஆபத்துள்ள நோயறிதல் அல்லாத, நோயாளி எதிர்கொள்ளும் பணிகளை தொலைபேசியில் முடிப்பதாகவும் நிறுவனம் கூறுகிறது.

உலகளவில் 15 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகையை பூர்த்தி செய்ய கூடுதலாக 4.2 மில்லியன் பயிற்சி பெற்ற செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள், 1000 பேருக்கு 1.7 சதவீதம் என்ற விகிதத்தில் செவிலியர்கள் தேவை. இந்த பற்றாக்குறையை போக்க இந்த டிஜிட்டல் முறை பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 747 என்ற கட்டணத்துடன் இந்த ஏஐ செவிலியர்கள், மனித செவிலியர்களை ஒப்பிடுகையில் செலவு குறைந்த மாற்றீட்டை வழங்குகிறது. அதாவது, பொதுவாக செவிலியர்களின் ஒருமணிநேர ஊதியம் தோராயமாக ரூ.7,473 ஆக உள்ளது. எனவே, இந்த ஏஐ செவிலியர்கள், சுகாதார சேவையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு உறுதியளிப்பது மட்டுமல்லாமல், சுகாதார அமைப்புகளின் நிதி சுமையை குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

இந்த ஏஐ செவிலியர்கள், ஹிப்போக்ராட்டிக் உருவாக்கியது மற்றும் NVIDIA மூலம் இயக்கப்படுகிறது. மனித உணர்வுகளை நெருக்கமாக பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட சுகாதார வழிக்காட்டுதலை வழங்கும் திறனை காட்டுகிறது. கொலோனோஸ்கோபி ஸ்கிரீனிங் முதல் மார்பக புற்றுநோய் பராமரிப்பு வரை பல்வேறு மருத்துவ தேவைகளை திறமையாக பூர்த்தி செய்வதாக கூறப்படுகிறது.

Readmore: சேப்பாக்கத்தில் IPL கிரிக்கெட்..!! மார்ச் 22, 26ஆம் தேதிகளில் அதிரடி மாற்றம்..!!

Tags :
Advertisement