வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்..!! இனி யாரும் அப்படி பண்ண முடியாது..!!
வாட்ஸ் அப்பில் Locked Chat அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் (Secret Code) எனும் வசதி அறிமுகப்படுத்தப்பத்தி உள்ளது மெட்டா நிறுவனம். வாட்ஸ்ஆப்செயலியில் புது புது அப்டேட்களை அந்நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது லாக்டு சாட் அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் உங்களது சாட்களுக்கென தனி பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளலாம். கைரேகை அல்லது ஃபேஸ் ஐடி உள்ளிட்டவைகளையும் பயன்படுத்தலாம். சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைக்கப்படும் சாட்கள் அனைத்துமே மெயின் சாட் லிஸ்ட்-இல் காண்பிக்கப்படாது.
செயலியில் பயனர் செட் செய்த சீக்ரெட் கோட்-ஐ பதிவிட்டால் மட்டுமே இதை இயக்க முடியும். இந்த அம்சத்தினை உங்கள் வாட்ஸ் அப்பில் செட் செய்ய, செயலியின் சாட் - லாக் செட்டிங்ஸ் - ஹைடு லாக்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி சீக்ரெட் கோட்-ஐ செட் செய்ய வேண்டும்.