"எனக்கு அது சுத்தமா பிடிக்காது, ஆனா எங்க அம்மா தான்..." வைரலாகும் நித்யா மேனனின் பேட்டி...
மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை நித்யா மேனன். பல்வேறு விருதுகளை பெற்ற இவர், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில், கிருத்திகா உதயநிதி டைரக்ட் செய்துள்ளார். பொங்கல் அன்று இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நித்யா மேனி அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறும் போது, "சின்ன வயதில் இருந்தே என்னை டான்ஸ் ஆடு பாட்டு பாடு கேமரா முன்பாக வந்து நடி என்று என் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் எனக்கு சுத்தமா சினிமா பிடிக்காது. எனக்கு இது பிடிக்கவில்லை என்று என் பெற்றோரிடம் சொன்னேன். அவர்களும் உனக்கு பிடித்ததை பண்ணு என்று சொன்னார்கள். 15 ஆண்டுகள் நடித்து விட்டோம், இனி சினிமாவை விட்டு முழுவதும் விலகிவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் திருச்சிற்றம்பலத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகை தேசிய விருதும் கிடைத்தது. அப்போது தான் சினிமா நம்மை விடாது, இது கடவுள் நமக்குத் தரும் லஞ்சம் என்று நினைத்துக் கொண்டேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு கேமரா முன்னாடி நிற்க பிடிக்காது. ஒரு நடிகையா என்னோட தனிப்பட்ட சுதந்திரத்தை ரொம்பவே மிஸ் பண்றேன்" என்று கூறியுள்ளார்.
Read more: “விஜய் மகன் மாதிரி ஒருத்தர நான் பார்த்ததே இல்ல” பிரபல இசையமைப்பாளர் அளித்த தகவல்..