முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர்..!! 41 தொழிலாளர்களின் உயிரை காப்பாற்றிய அர்னால்டு டிக்ஸ்..!!

10:19 AM Nov 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 12ஆம் தேதி பணி நடைபெறும்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Advertisement

இதனையடுத்து சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு நடைபெற்ற மீட்புப் பணிகளை, அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட்டார். தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில், சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளர்கள் என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் அர்னால்டு டிக்ஸ் என்பவர் தான். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ் பெற்ற சர்வதேச சுரங்கப்பாதை நிபுணரான இவரின் வழிகாட்டுதல் படியே, இந்திய பேரிடர் மீட்பு படையினர் செயல்பட்டனர். பல சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அனுபவமே, 41 பேரை பத்திரமாக மீட்க தனக்கு கைக்கொடுத்ததாக அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags :
41 தொழிலாளர்கள் மீட்புஅர்னால்டு டிக்ஸ்உத்தரகாண்ட் மாநிலம்சுரங்கப்பாதை நிபுணர்
Advertisement
Next Article