கார்த்திக் குமார் பற்றி பேச பாடகி சுசித்ராவுக்கு இடைக்கால தடை!
நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடகி சுசித்ராவுக்கு எதிராக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி கார்த்திக் குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டது.
யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷ் நண்பராக நடித்து பிரபலமானவர் கார்த்திக் குமார். இவரது முன்னாள் மனைவியும், பாடகியுமான சுசித்ரா, சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், "கார்த்திக் குமார் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். ஓரினச்சேர்க்கையாளராக வெளிவர அவருக்கு தைரியம் இல்லை. திருமணமான இரண்டு வருடங்களில் நான் அதை கண்டு பிடித்தேன்.
திருமணமான முதல் ஆண்டு எனக்கும், கார்த்திக் குமாருக்கும் குழந்தை இல்லை என்பதால் மருத்துவரிடம் சென்றோம். அப்போது மருத்துவர் என் கணவர் ஓரினச்சேர்க்கையாளரா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று என்னிடம் கேட்டார். இதன் பிறகு அவர் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி பழகுவதை நான் கவனித்தேன். அடிக்கடி மும்பை சென்றுவிடுவார்" எனக் கூறியிருந்தார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
நடிகர் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த விடியோவில், "நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால், அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாகவே கருதுகிறேன். அனைத்து பாலினங்களுக்கும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே" என்று தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து நடிகர் கார்த்திக் குமார் பாடகி சுஜித்ராவின் பேச்சை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். தன்னை பற்றி பாடகி சுஜித்ரா தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு தடை கேட்டும், சுஜித்ராவிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு அவரது முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி முன்பு விசாரனைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் கார்த்திக் குமார் பற்றி பேச பாடகி சுஜித்ராவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்தியாவின் பயிற்சியாளராக ஆஸ்ரேலியா வீரரா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெய்ஷா!