செம குட் நியூஸ்..!! வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..!! ஆனால், ஒரு ட்விஸ்ட்..!! வெளியான அறிவிப்பு..!!
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து 9-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடர்கிறது என ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வீடு, வாகனங்களுக்கான கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே சமயம், வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது.
நடப்பு நிதியாண்டிற்கான 3-வது இருமாத நாணயக் கொள்கையை அறிவித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்ற நாணயக் கொள்கைக் குழு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ”ஸ்டாண்டிங் டெபாசிட் வசதி விகிதம் 6.25%, மார்ஜினல் ஸ்டாண்டிங் வசதி விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆக உள்ளது.
உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து நெகிழ்ச்சியுடன் இருந்து வருகிறது. தென்மேற்கு பருவமழையின் நிலையான முன்னேற்றம், காரீஃப் பருவத்துக்கான விதைப்பு மற்றும் நீர்த்தேக்கங்களின் அளவை மேம்படுத்துதல் ஆகியவை காரீஃப் பருவ விளைச்சலுக்கு மிகவும் நல்லது. ஏப்ரல், மே மாதங்களில் 4.8 சதவீதமாக நிலையாக இருந்த பணவீக்கம், ஜூன் மாதம் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2024-25ஆம் ஆண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆகவும், முதல் காலாண்டில் 7.1% ஆகவும், 2-வது காலாண்டில் 7.2% ஆகவும், மூன்றாவது 7.3% ஆகவும், நான்காவது காலாண்டில் 7.2% ஆகவும் இருக்கும். 2025-26ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.2% என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ”இனி இவர்களும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்”..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!