முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தீவிரமடைந்து வரும் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்..!! மிகவும் ஆபத்தானதா..? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

11:21 AM Dec 18, 2023 IST | 1newsnationuser6
Advertisement

புது வகை கொரோனாவால் கேரளாவில் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த புது வகை குறித்து நாம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

Advertisement

ஜேஎன் 1 கொரோனா இப்போது கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் காரணமாக உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கும் நிலையில், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. இந்த ஜேஎன் 1 வேரியண்ட் என்பது கொரோனா ஒமைக்ரானின் துணை பிரிவான BA.2.86இன் புதிய மாறுபாடு ஆகும். இந்த வகை கொரோனாவின் ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வு ஏற்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட வேரியண்ட் வேகமாகப் பரவும் திறன் கொண்டது. மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியைத் தவிர்க்கும் திறனும் இதற்கு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுவே, இந்த கொரோனா வேரியண்ட்டை ஆபத்தானதாக மாற்றுகிறது. இதனால், இந்த வகை கொரோனாவை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் அறிகுறிகள் மற்ற வேரியண்ட்களில் இருந்து வேறுபட்டது இல்லை. பொதுவாக அனைத்து கொரோனா வகைகளின் அறிகுறிகளும் ஒரே போல தான் இருக்கும். இந்த குறிப்பிட்ட வகை கொரோனாவுக்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை. காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், தலைவலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. அதேநேரம் இந்த திரிவு குறித்து நம்மிடம் போதுமான தகவல்கள் இல்லை என்றும் இதன் காரணமாகவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

ஜேஎன் 1 வகை கொரோனா பாதிப்பு சீனாவிலும் பரவியுள்ளது. இதுவரை 7 பேருக்கு இந்த பாதிப்பு அங்கே கண்டறியப்பட்டுள்ளது. துணை வேறுபாடு JN.1 மூலம் ஏற்படும் COVID இன் ஏழு நிகழ்வுகளைச் சீனா கண்டறிந்துள்ளது. அந்த வகை கொரோனா கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், அதன் பிறகு இப்போது வரை அது 11 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வகை கொரோனாவால் ஆபத்து இல்லை என்றாலும் இதை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் ஒரே கருத்தாக உள்ளது.

Tags :
உலக சுகாதார அமைப்புகேரள மாநிலம்கொரோனா வைரஸ்ஜேஎன் 1 கொரோனா வைரஸ்
Advertisement
Next Article